தெலுங்கானா:ஆளுநர் தமிழிசையை மெர்சலாக்கிய ஆரவாரம்.. ஸ்டேடியமே முழக்கங்களால் அதிர பதவியேற்ற 'சீதாக்கா'
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்பில் சீதாக்கா, அமைச்சராக பதவியேற்ற போது காங்கிரஸ் தொண்டர்கள் ஆரவார முழகங்களால் ஸ்டேடியமே அதிர்ந்தது.
சீதாக்கா.. தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர். தெலுங்கானா புதிய அமைச்சரவையில் கவனம் பெற்றிருப்பவர் சீதாக்கா. 1971-ம் ஆண்டு பிறந்த சீதாக்கா (தன்சாரி அனசூயா) கோயா பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர். தமது 14 வயதில் ஜனசக்தி நக்சல் இயக்கத்தில் ஆயுதம் ஏந்திய போராளியானவர். 11 ஆண்டுகள் நக்சலைட்- மாவோயிஸ்டாக ஆயுதப் போராட்டத்தில் இணைந்திருந்த சீதாக்கா, 1994 காலகட்டத்தில் ஆயுதப் போராட்டத்தில் இருந்து விலகினார். 1997-ல் பொது மன்னிப்பு பெற்ற சீதாக்கா, சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞரானார். 2022-ல் "அரசியல் அறிவியலில்' முனைவர் பட்டம் பெற்றார் சீதாக்கா.

2004-ம் ஆண்டு தெலுங்குதேசம் கட்சியில் இணைந்து ஜனநாயக அரசியலில் பயணிக்க தொடங்கினார். 2004 தேர்தலில் முலுக் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். ஆனால் 2009-ம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு முதல் முறை எம்.எல்.ஏ.வானார். 2014 தேர்தலில் பிஆர்எஸ் வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார் சீதாக்கா. 2017-ல் தெலுங்குதேசம் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியும் சீதாக்காவை தேடி வந்தது. 2018, 2023 தேர்தல்களில் முலுக் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். கொரோனா லாக்டவுன் காலத்தில் தெலுங்கானா- சத்தீஸ்கர் எல்லையில் 400 கிராமங்களுக்கு பயணித்து நிவாரணப் பொருட்களை தலை சுமையாக கொண்டு சேர்த்தார். இதனால் சீதாக்கா அப்போது மக்களால் கொண்டாடப்பட்டார்.

தெலுங்கானாவில் காங்கிரஸ் வென்றதைத் தொடர்ந்து ரேவந்த் ரெட்டி இன்று முதல்வராக பதவி ஏற்றார். ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் சீதாக்காவும் இடம் பெற்றார். ஹைதராபாத் எல்.பி. ஸ்டேடியத்தில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
அமைச்சர்கள் பதவியேற்கும் போது சீதாக்கா பெயரை அறிவித்ததுதான் தாமதம். ஒட்டுமொத்த ஸ்டேடியமே அதிர அதிர முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. மைக் முன்னர் நின்ற சீதாக்கா பிரமாணத்தை வாசிக்க முடியாத அளவு முழக்கங்கள் தொடர்ந்தன. அதுவரை இறுக்கமாக இருந்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அப்போதுதான் சிரித்தார். அவர் சிரித்தபடி சீதாக்காவை பதவி பிரமாணத்தை வாசிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனையடுத்து முழக்கங்கள் தொடர சீதாக்காவும் அமைச்சராகப் பதவியேற்றார். அவருக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி, மல்லிகார்ஜூன கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications