குருமூர்த்திக்கு வந்த கோபம்.. துண்டு துண்டாக குக்கரில் வெந்த மாதவி! குளத்தில் தேடும் போலீஸ்.. பகீர்!
ஹைதராபாத்: தெலங்கானாவில் மனைவியை கொன்று உடல்பாகங்களை குக்கரில் வேகவைத்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறை நடத்திய விசாரணையில் சண்டையின் போது மாதவியை கொன்ற அவர், அவரது உடல்பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, அதனை குக்கரில் வேகவைத்து குளத்தில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து குளத்தில் வீசப்பட்ட உடல்பாகங்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் கொலை சம்பவங்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்வது போல் தான் இருக்கிறது. குறிப்பாக குடும்ப பிரச்சினைகள் காரணமாக கணவனையோ அல்லது மனைவியையோ துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அப்படி ஒரு சம்பவம் தான் தெலுங்கானாவில் நடைபெற்றிருக்கிறது. கோபத்தில் மனைவியை கொலை செய்த கணவன், அவரை துண்டு துண்டாக வெட்டி, குக்கரில் உடல் பாகங்களை வேக வைத்து குளத்தில் வீசி இருக்கிறார். தெலுங்கானாவை அதிரவைத்த இந்த சம்பவத்தின் பகீர் பின்னணி குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்..
ஓய்வு பெற்ற ராணுவ வீரரான குருமூர்த்தி ஹைதராபாத்தில் தனது மனைவி மாதவியுடன் வசித்து வந்தார். மேலும் அப்பகுதியில் அவர் செக்யூரிட்டியாகவும் வேலை செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதியிலிருந்து மாதவி மாயமானார். தொடர்ந்து மகள் தன்னுடன் பேசாததால் அதிர்ச்சி அடைந்த மாதவியின் பெற்றோர் இது குறித்து குருமூர்த்தியிடம் கேட்டுள்ளனர். ஆனால் குருமூர்த்தி முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அவர்கள் தங்களது மகள் மாதவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர்.
புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் குருமூர்த்தியை தனியாக அழைத்து விசாரித்தனர். தன்னுடன் சண்டை போட்ட மாதவி உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளதாக கூறி சமாளித்திருக்கிறார். ஆனால் மாதவியின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. அவரது டவர் லொகேஷனை பார்த்தபோது கடைசியாக வீட்டைத் தான் காட்டியுள்ளது .இதனால் குருமூர்த்தி மீது சந்தேகம் கொண்ட போலீசார் அவரை கைது செய்த ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.
அப்போதுதான் அதிர்ச்சி தரும் அந்த தகவல் வெளியானது. தன்னுடன் சண்டை போட்டதால் மனைவியை கொலை செய்ததாக பகீர் தகவலை கூறினார் குருமூர்த்தி. அதைவிட அவர் சொன்ன தகவல் போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாகியது. கோபத்தில் மனைவியை கொலை செய்து விட்டதால் தடயங்களை மறைப்பதற்காக அவரது உடலை வீட்டின் பாத்ரூமில் வைத்து துண்டு துண்டாக வெட்டி அதனை குக்கரில் வைத்து வேக வைத்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும் எலும்பை மிக்ஸியில் போட்டு இடித்து மீண்டும் வேக வைத்து அதனையும் ஒன்றாக கொட்டி அப்பகுதியில் உள்ள குளத்தில் போட்டுள்ளதாக தெரிவித்தார்.
மூன்று நாட்கள் உடலை துண்டு துண்டாக வெட்டி வேக வைத்து எடுத்துச் சென்று குளத்தில் வீசியதாக கூறி அதிர வைத்தார் குருமூர்த்தி. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் குருமூர்த்தியை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உடல் பாகங்களை வீசியதாக சொன்ன குளத்தில் தொடர்ந்து போலீஸ் மோப்பநாய் உதவியுடன் தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை உடல் பாகங்கள் கிடைக்காததால் குருமூர்த்தியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குருமூர்த்திக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் அவர்களை சொந்தக்காரர் வீட்டுக்கு அனுப்பிவிட்டுத்தான் இந்த கொலையை அரங்கேற்றி இருக்கிறார் என கூறும் போலீசார் தொடர்ந்து குருமூர்த்தியை காவலில் எடுத்து விசாரித்து வருவதாகவும், உடல்பாகங்கள் கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications