தெலுங்கானா பரபரப்பு: ஜெகன் சகோதரி ஷர்மிளா கட்சியும் தேர்தலில் போட்டியில்லை- காங்கிரஸுக்கு ஆதரவு!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளாவின் ஒய்.எஸ்.ஆர்.டி.பி (YSRTP) கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. மேலும் தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும் ஒய்.எஸ்.ஆர்.டி.பி தலைவர் ஷர்மிளா அறிவித்துள்ளார்.
தெலுங்கானா சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக, இடதுசாரிகளும் தேர்தல் களத்தில் உள்ளன.

தெலுங்கானா தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டது. இதற்கு தெலுங்கானா தெலுங்குதேசம் கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ஒய்.எஸ்.ஷர்மிளாவின் ஒய்.எஸ்.ஆர்.டி.பி கட்சியும் தேர்தலில் போட்டியிடவில்லை; ஆளும் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்த காங்கிரஸை ஆதரிப்போம் என அறிவித்துள்ளது. முன்னதாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர பேச்சுவார்த்தைகளை நடத்தி இருந்தார் ஷர்மிளா. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததால் 119 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் எனவும் கூறியிருந்தார் ஒய்.எஸ். ஷர்மிளா.
தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் இம்முறை கணிசமான இடங்களை வெல்லும்; ஆட்சியை கைப்பற்றவும் வாய்ப்பிருக்கிறது என சில கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தன. அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பங்கீடு பிரச்சனையில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. மற்றொரு இடதுசாரி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்னமும் பொறுத்திருப்பதாக கூறியிருக்கிறது. இந்த நிலையில் ஒய்.எஸ்.ஷர்மிளா கட்சி தமது ஆதரவை காங்கிரஸுக்கு தெரிவித்துள்ளது.
தெலுங்கானா தொடர்பான கருத்து கணிப்புகளில் பிஆர்எஸ், காங்கிரஸ் ஆகியவை அதிக இடங்களைக் கைப்பற்றும்; பாஜக சிங்கிள் டிஜிட் இடங்களில் வெல்லும்; இடதுசாரிகளுக்கும் ஒன்றிரண்டு தொகுதிகள் கிடைக்கும்; ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி வழக்கம் போல 7 தொகுதிகளில் வெல்லும் என்பதுதான் பொதுவான கருத்து கணிப்புகள். இந்த ரேஸில் தெலுங்குதேசமோ, ஒய்.எஸ்.ஷர்மிளா கட்சியோ இடம் பெறவில்லை. இருந்தாலும் ஒய்.எஸ்.ஷர்மிளா கட்சியின் இந்த ஆதரவு காங்கிரஸுக்கு மகிழ்ச்சியை தரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications