Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெலுங்கானா சட்டசபை தேர்தல் நாளை வாக்குப் பதிவு: நெருப்பாற்றில் நீந்தி வெல்வாரா முதல்வர் கேசிஆர்?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆளும் பிஆர்எஸ் கட்சி 3-வது முறையாக ஆட்சியை தக்க வைத்து ஹாட்ரிக் சாதனை படைக்குமா? என்பது பெரும் எதிர்பார்ப்பு.

தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தெலுங்கானாவில் ஆட்சி அமைக்க தேவை மொத்தம் 60 இடங்கள். தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிரிய சமிதி - பிஆர்எஸ் ஆளும் கட்சியாக இருக்கிறது. முதல்வராக கே.சந்திரசேகர ராவ் பதவி வகித்து வருகிறார்.

Telangana Set to go to Assembly Election 2023 tomorrow

தெலுங்கானா தேர்தல் களத்தில் கட்சிகள்: ஆளும் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ் கட்சி, பாஜக, மஜ்லிஸ் கட்சி, ஜனசேனா, இடதுசாரிகள் ஆகியவை தெலுங்கானா தேர்தல் களத்தில் உள்ளன. பிஆர்எஸ் கட்சியும் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. பாஜக கூட்டணியில் ஜனசேனா இடம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றுள்ளது. மற்றொரு இடதுசாரி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

தெலுங்கானா வாக்காளர்கள்: தெலுங்கானாவில் மொத்தம் 3,17,32,727 பேர் வாக்காளர்கள். இவர்களில் 3,17,17,389 பேர் பொது வாக்காளர்கள். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்காளர்கள் 15,338 . முதல் முறையாக வாக்களிப்பவர்கள் 5,32,990. 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 4,43,943 பேர். 3-ம் பாலினத்தவர் 2,557 பேர் வாக்காளர்கள். தெலுங்கானாவில் மொத்தம் 35,356 polling வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தெலுங்கானா வேட்பாளர்கள்: தெலுங்கானா தேர்தல் களத்தில் மொத்தம் 2,290 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 221 பேர் 3-ம் பாலினத்தவர்.

முக்கிய வேட்பாளர்கள்: முதல்வர் சந்திரசேகர ராவ் கமரெட்டி, கஜ்வெல் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். கமரெட்டி தொகுதியில் சந்திரசேகர ராவை எதிர்த்து காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி போட்டியிடுகிறார். கோடங்கல் தொகுதியிலும் ரேவந்த் ரெட்டி போட்டியிடுகிறார். கேசிஆர் மகனும் தெலுங்கானா அமைச்சருமான கேடி ராமாராவ் சிர்சிலா, பாஜக எம்பி பண்டி சஞ்சய் குமார் கரீம்நகர்,
மாஜி கிரிக்கெட் வீரர் அசாருதீன் (காங்கிரஸ்) ஜூப்ளி ஹில்ஸ், ஓவைசி சந்திரயாங்குட்டா தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் பாதுகாப்பு: தெலுங்கானா சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் சுமார் 2.5 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 50 கம்பெனி தெலுங்கானா போலீஸ், 375 கம்பெனிகள் மத்திய படைகள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

2018 தெலுங்கானா தேர்தல் முடிவுகள்: தெலுங்கானாவில் 2018-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பிஆர்எஸ் கட்சி 88 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 19, மஜ்லிஸ் கட்சி 7, தெலுங்குதேசம் 2, பாஜக 1 இடத்தில் வென்றது. 2014-ம் ஆண்டு முதல் 2 முறை முதல்வராக பதவி வகித்து வருகிறா முதல்வர் சந்திரசேகர ராவ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+