தெலுங்கானா இடைத் தேர்தலில் டெபாசிட்டை பறிகொடுத்தது பாஜக! காங்கிரஸ் அபார வெற்றி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நவீன் யாதவ் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் தீபக் ரெட்டி டெபாசிட்டை இழந்தார். பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி பெருவெற்றி பெற்றுள்ள நிலையில், தெலுங்கானா இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் பிஆர்ஆஸ் எம்எல்ஏ மகந்தி கோபிநாத் மாரடைப்பால் இறந்ததால் ஜூபிலி ஹில்ஸ் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தெலுங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி, வி. நவீன் யாதவை வேட்பாளராக நிறுத்தியது. எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ் மறைந்த எம்.எல்.ஏ.வின் மனைவி மகந்தி சுனிதாவை நிறுத்தியது. இந்த தொகுதியில் மொத்தம் 58 வேட்பாளர்கள் களத்தில் மோதினர்.

ஜூபிலி ஹில்ஸ் தொகுதிக்கு கடந்த நவம்பர் 11 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஜூபிலி ஹில்ஸ் இடைத்தேர்தலில் 48.43 சதவீத வாக்குப்பதிவானது. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 194,632 வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு யூசுப்குடாவில் உள்ள கோட்லா விஜயபாஸ்கர் ரெட்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நவீன் யாதவ் முன்னிலை வகிக்கிறார். 7வது சுற்றில், காங்கிரஸ் வேட்பாளர் நவீன் யாதவ் 70,341 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார், பிஆர்எஸ் வேட்பாளர் மகந்தி சுனிதா கோபிநாத்தை விட 19,797 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார், அவர் 50,544 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜகவின் தீபக் ரெட்டி 11,923 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். 10 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
ஏற்கனவே பிஆர்எஸ் கட்சியின் மகந்தி கோபிநாத் வெற்றி பெற்ற இந்த தொகுதியை அவரது மறைவுக்கு பிறகு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி பெருவெற்றி பெற்றுள்ள நிலையில், தெலுங்கானா இடைத்தேர்தலில் பாஜக டெபாசிட்டை இழந்துள்ளது.
-
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications