கேசிஆர் vs காங்கிரஸ்.. திக்கு தெரியாமல் திணறும் பாஜக.. தேதி வேற சொல்லிட்டாங்களே.. தாமரை கருகுது?
ஹைதராபாத்: தெலுங்கானாவில் தேர்தல் சுரம் தீவிரம் அடைந்து உள்ள நிலையில்தான் அங்கே தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 5 மாநில தேர்தலோடு சேர்த்து தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
அதன்படி இதற்கான தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன,

அதில்,
மிசோரம் - நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடக்கும்
மத்திய பிரதேசம் - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடக்கும்
ராஜஸ்தான் - நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடக்கும்
சத்தீஸ்கர் - நவம்பர் 7 மற்றும் 17 (2 கட்டமாக தேர்தல் நடக்கும்)
தெலங்கானா - நவம்பர் 30ம் தேதி தேர்தல் நடக்கும்
5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 3ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டோம்: இதில் தெலுங்கானா தேர்தல் நவம்பர் 30ம் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முடிவுகள் எல்லாம் ஒன்றாக டிசம்பர் 3ம் தேதிதான் வரும். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் - மே மாதம் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தற்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் அதற்கு வரப்போகும் டீசர் போல பார்க்கப்படுகிறது.
தெலுங்கானா தேர்தல்: இந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் தெலுங்கானா தேர்தல் மட்டும்தான் தென்னிந்தியாவில் நடக்கும் ஒரே தேர்தல் ஆகும். மொத்தமாக 119 தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்க உள்ளது. அங்கே சட்டசபை தொகுதிகள் குறைவாகவே உள்ளன என்றாலும் அதே தெலுங்கு காரம் எல்லா தொகுதிகளிலும் தூக்கலாகவே இருக்கும்.
அங்கே கடந்த 4 வருடமாக பாஜக - டிஆர்எஸ் (பிஆர்எஸ்) என்ற நிலைதான் இருந்தது. ஆனால் கடந்த 1வருடமாக அங்கே சிறப்பாக செயல்பட்டு காங்கிரஸ் அடித்து தூக்கி மேலே வந்துள்ளது. சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு சாதகமான சூழ்நிலை என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மாறி உள்ளது., இன்னொரு பக்கம் பாஜகவோ பெரிய அளவில் அரசியல் செய்ய முடியாமல்.. எந்த பாயிண்டும் கிடைக்காமல்.. பாயிண்ட் வரட்டும் பாயிண்ட் வரட்டும் என்று திக்கு தெரியாத காட்டில் தவித்துக்கொண்டு இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி அதே கர்நாடக வெற்றி பார்முலாவான பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாத உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது. காங்கிரசுக்கு அங்கே வாய்ஸ் கூடி வரும் நிலையில்.. கே சந்திரசேகர ராவ் எப்படியாவது மீண்டும் லைம்லைட்டிற்கு திரும்ப முடிவு செய்துள்ளார். பாஜக அவரை வலுவாக தாக்க.. பாஜக இவரை வலுவாக தாக்க என்று மாறி மாறி தாக்கி.. முடிந்த அளவு காங்கிரசை லைம்லைட்டிற்கு விவாதங்களுக்குள் கொண்டு
வராமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அங்கே கடந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 99 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் வெறும் 7 இடங்களில்தான் வென்றது. ஆனால் இந்த முறை அதே நிலைமை தொடருமா என்ற கேள்வி உள்ளது., இங்கே பாஜக கடந்த தேர்தலில் 3 இடங்களை மட்டுமே வென்ற நிலையில் இந்த முறை எத்தனை இடங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது .
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications