களநிலவரமே வேறயாமே.. தெலுங்கானாவில் காங்கிரசுக்கு வேட்டு வைக்கும் கேசிஆர்? எதிர்பார்க்காத ட்விஸ்ட்?
ஹைதராபாத்: தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் சுரம் தீவிரம் அடைந்து உள்ளது. நாளை அங்கே சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அங்கே என்னதான் தேர்தல் கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வந்தாலும் கள நிலவரம் வேறு மாதிரி இருப்பதாக கூறப்படுகிறது.
5 மாநில சட்டசபை தேர்தல்கள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது . ஏற்கனவே 4 மாநில தேர்தல்கள் முடிந்துவிட்டன. மிசோரம் - நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடந்தது. மத்திய பிரதேசம் - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடந்தது. ராஜஸ்தான் - நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடந்தது. சத்தீஸ்கர் - நவம்பர் 7 மற்றும் 17ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடந்தது.

இந்த நிலையில் நாளை தெலங்கானாவில் நவம்பர் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 3ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தல்: இதில் தெலுங்கானா தேர்தல் நாளை- நவம்பர் 30ம் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முடிவுகள் எல்லாம் ஒன்றாக டிசம்பர் 3ம் தேதிதான் வரும். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் பார்க்கப்படுகிறது.
அடுத்த வருடம் ஏப்ரல் - மே மாதம் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தற்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் அதற்கு வரப்போகும் டீசர் போல பார்க்கப்படுகிறது.
தெலுங்கானா தேர்தல்: இந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் தெலுங்கானா தேர்தல் மட்டும்தான் தென்னிந்தியாவில் நடக்கும் ஒரே தேர்தல் ஆகும். மொத்தமாக 119 தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்க உள்ளது. அங்கே சட்டசபை தொகுதிகள் குறைவாகவே உள்ளன என்றாலும் அதே தெலுங்கு காரம் எல்லா தொகுதிகளிலும் தூக்கலாகவே இருக்கும்.
அங்கே கடந்த 4 வருடமாக பாஜக - டிஆர்எஸ் (பிஆர்எஸ்) என்ற நிலைதான் இருந்தது. ஆனால் கடந்த 1வருடமாக அங்கே சிறப்பாக செயல்பட்டு காங்கிரஸ் அடித்து தூக்கி மேலே வந்துள்ளது. சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு சாதகமான சூழ்நிலை என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மாறி உள்ளது., இன்னொரு பக்கம் பாஜகவோ பெரிய அளவில் அரசியல் செய்ய முடியாமல்.. எந்த பாயிண்டும் கிடைக்காமல்.. பாயிண்ட் வரட்டும் பாயிண்ட் வரட்டும் என்று திக்கு தெரியாத காட்டில் தவித்துக்கொண்டு இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி அதே கர்நாடக வெற்றி பார்முலாவான பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாத உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது. காங்கிரசுக்கு அங்கே வாய்ஸ் கூடி வரும் நிலையில்.. கே சந்திரசேகர ராவ் எப்படியாவது மீண்டும் லைம்லைட்டிற்கு திரும்ப முடிவு செய்துள்ளார். பாஜக அவரை வலுவாக தாக்க.. பாஜக இவரை வலுவாக தாக்க என்று மாறி மாறி தாக்கி.. முடிந்த அளவு காங்கிரசை லைம்லைட்டிற்கு விவாதங்களுக்குள் கொண்டு
வராமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
கள நிலவரம்: அங்கே சர்வேக்கள் காங்கிரஸ் வெற்றி என்று சொன்னாலும் கிரவுண்ட் நிலைமை பிஆர்எஸ் வெல்ல வாய்ப்பு என்கின்றன. முக்கியமாக கிரவுண்ட் வேலைகளை பிஆர்எஸ் தீவிரமாக செய்து வருகிறது. காரணம், களத்தில் வேலை பார்ப்பது கேசிஆரின் பிஆர்எஸ் கட்சியினர். காங்கிரசுக்கு களத்தில், பூத்லெவலில் பிடிமானம் இல்லை. பூத் லெவலில் பல இடங்களில் காங்கிரசுக்கு நிர்வாகிகள் இல்லை.
ஆனால் பிஆர்எஸ் கட்சியினருக்கு கள அளவில் நிறைய நிர்வாகிகள் உள்ளனர். அங்கே 119 இடங்கள் உள்ளன. தேர்தல் கணிப்புகள் பல காங்கிரஸ் கட்சிக்கு 60-70 இடங்கள் கிடைக்கும். பிஆர்எஸ் கட்சிக்கு 40-50 இடங்கள் கிடைக்கும் என்று கூறியுள்ளன. பாஜகவிற்கு அதிக பட்சம் 10 இடங்கள் கிடைக்கும் என்று கணிப்புகள் கூறியுள்ளன. ஆனால் களநிலவரங்களை பார்க்கும் போது.. அங்கே நிலைமை வேறு மாதிரி இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக பிஆர்எஸ் கட்சியிடம் தொண்டர்கள் படை + அதிகார பலம் இருப்பதால் கடைசி நேரத்தில் பல தொகுதிகளில் வாக்குகள் ஸ்விங் ஆகும் வாய்ப்புகள் கூட உள்ளதாக கூறப்படுகிறது.
அங்கே கடந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 99 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் வெறும் 7 இடங்களில்தான் வென்றது. ஆனால் இந்த முறை அதே நிலைமை தொடருமா என்ற கேள்வி உள்ளது., இங்கே பாஜக கடந்த தேர்தலில் 3 இடங்களை மட்டுமே வென்ற நிலையில் இந்த முறை எத்தனை இடங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது .












Click it and Unblock the Notifications