10,000 நிர்வாண வீடியோ.. முதல்வர் மகளின் உதவியாளர் உள்பட 143 பேரால் பலாத்காரம்.. இளம் பெண் பகீர்
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் மகளின் உதவியாளர் உள்பட 143 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேல் நிர்வாணமாக வீடியோக்கள் எடுத்துள்ளனர். அவற்றை ஆன்லைனில் வெளியிட்டுள்ளார்கள் என இளம் பெண் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தெலங்கானா மாநில முதல்வர் மகளின் முன்னாள் உதவியாளர், வக்கீல்கள், திரை உலகினர் உட்பட பலர் தன்னை கடந்த 10 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்து விட்டதாக,
தெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த சரிதா (25) என்பவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
ஹைதராபாத்தின் பச்சகுட்டாவைச் சேர்ந்த சரிதா தனது மனுவில் 'கடந்த 2009ம் ஆண்டு கொண்டாரெட்டி கிராமத்தை ரமேஷ் என்பவருக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு கணவரின் பெற்றோர் மற்றும் சகோதரர், சகோதரி ஆகியோர் 9 மாதங்களாக தொடர்ந்து சித்ரவதை செய்தார்கள்.

கல்லூரியிலும் பலாத்காரம்
என்னுடைய கணவரின் குடும்பத்தை சேர்ந்த ஆண்களே பலமுறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்கள். இதனால், கடந்த 2010ம் ஆண்டு என் கணவர் என்னை விவகாரத்து செய்தார். இதனால் அதன்பிறகு படிப்பதற்காக கல்லூரிக்கு சென்றேன். அப்போது, எனக்கு சிலர் அறிமுகம் ஆனார்கள். அவர்கள் என்னுடைய வாழ்க்கையை முழுவதுமாக சீரழித்துவிட்டார்கள்.

சென்னை வழக்கறிஞர்கள்
இந்திய மாணவர் சங்கத்தினர், தெலங்கானா மாநில முதல்வர் மகள் கவிதாவின் முன்னாள் உதவியாளர் சந்தோஷ் ராவ், ஜிம் உரிமையாளர், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர்கள், பெங்களூரை சேர்ந்த நாத் ஆகியோர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்கள். அவர்கள் என்னை ஒரு, அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினார்கள்.

மிரட்டி வீடியோ எடுத்தனர்
கத்தியை காட்டி மிரட்டியதுடன், பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவோம், ஆசிட் ஊற்றி விடுவோம் என்று என்னை தொடர்ந்து மிரட்டி நிர்வாணமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்தார்கள். அந்த வீடியாக்களை அவர்களின் நண்பர்களுக்கு செல்போன் மூலமாக அனுப்பினார்கள். அவர்களையும் வரவழைத்து என்னுடன் பாலியலில் உறவில் ஈடுபடுத்தினார்கள்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்
இப்படி 2010ம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளில் என்னை இதுபோல், 143 பேர் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்துவிட்டார்கள். என்னை பலாத்காரம் செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அந்த புகார் மனுவில் சரிதா கூறியுள்ளார். இதனிடையே சரிதனா 139 பேரின் பெயரை சரியாக கூறியுள்ளார். 4 பேரை தனக்கு அடையாளம் தெரியவில்லை என்று கூறியுள்ளார். இந்த மனுவை பெற்றுக் கொண்ட பஞ்சகுட்டா போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் கூறியிருக்கிறார்கள். 42 பக்கத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் விவகாரம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications