மரித்தும் மகளுக்காக வந்த தந்தை! திருமண நாளில் அண்ணன் கொடுத்த அற்புத சீர்! நெகிழ்ச்சி செயலை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத் : தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே தங்கையின் திருமணத்திற்காக, மரணமடைந்த தந்தையின் மெழுகுச் சிலையை தத்ரூபமாக உருவாக்கிக் சீராக திருமணத்தன்று கொடுத்த அண்ணனின் செயல் சமூக வலைதளங்களில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருவில் சுமந்து உயிரை கொடுத்தவர் தாய் என்றால், தோளில் சுமந்து உலகை காட்டி அறிவும் உணர்வும் கொடுத்தவர்தான் தந்தை. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தந்தை தான் அனைவருக்குமே ஹீரோ.

அப்பாவின் அருமையை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. தந்தையை இழந்தவர்களுக்குத்தான் தெரியும் அவரது அருமையும் பெருமையும்.

தந்தை எனும் தெய்வம்

தந்தை எனும் தெய்வம்

பிறந்தது முதல் தோளில் தூக்கிச் சுமந்த தந்தை திடீரென ஏற்படும் வெற்றிடத்தை இவ்வுலகிலுள்ள எவ்வித பொக்கிஷங்களும் நிரப்பி விட முடியாது. ஆனாலும் விதி யாரையும் யாருடனும் அவ்வளவு சீக்கிரம் விட்டு விடாது. இருந்தும் நவீன உலகில் ஆயிரமாயிரம் அழுத்தங்கள் இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு நொடியெனும் தந்தையின் நினைவின்றி கடந்து செல்ல முடியாது. அதற்கு வாழும் உதாரணம் நாம் அனைவரும்.

 நெகிழ்ச்சி சம்பவம்

நெகிழ்ச்சி சம்பவம்

இந்நிலையில் தான் மரணமடைந்த தந்தையின் நினைவில் வாடிய தங்கையின் திருமணத்தின் போது தந்தையை மெழுகுச் சிலையாக வடிவமைத்து அவரது திருமணத்திற்கு சீராக கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் ஜெயா தம்பதியினருக்கு சாய் என்ற மகளும் ஹனிக்குமார் என்ற மகனும் உள்ளனர். கடந்தாண்டு உலகையே உலுக்கிய குழந்தையின் போது உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன் அதிலிருந்து மீளமுடியாமல் கடந்த ஆண்டு அகால மரணம் அடைந்தார்.

திடீர் மரணம்

திடீர் மரணம்

கணவனை நினைவில் இருந்து நீக்க முடியாமல் மனைவியும், தந்தையை இறந்த சோகம் தாங்க முடியாமல் மகனும் மகளும் தினம் தோறும் அழுது புலம்பி வந்துள்ளனர். ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை என்பதை போல ஒரு வருடத்திற்கும் மேலாக சோகத்தில் மூழ்கியிருந்த குடும்பம் ஒருவாறாக அதிலிருந்து மீண்டுள்ளது. இந்நிலையில் சாய்க்கு திருமணம் செய்து வைக்க அவர்கள் குடும்பத்தினர் முடிவெடுத்த நிலையில், மதன் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

மகளுக்கு திருமணம்

மகளுக்கு திருமணம்

திருமணத்திற்கான ஏற்பாடுகள் வெகு விமர்சையாக செய்யப்பட்ட நிலையில் வருங்கால மனைவி சாயை கைப்பிடித்தார் மதன். உற்றார் உறவினர்கள் உற்சாகமாக வாழ்த்தினாலும் தனது தந்தை திருமணத்தை பார்க்க இல்லையே என்ற குறை மணமகளின் ஆழ்மனதில் அடைத்து நின்றது. அப்போதுதான் மண்டபத்தில் இருந்த அனைவரையும் நிகழ்ச்சிக்கு உள்ளாக்கும் ஒரு சம்பவம் நடந்தது.

எதிர்பாராத பரிசு

எதிர்பாராத பரிசு

மரணமடைந்த தனது தந்தை சுப்பிரமணியனின் மெழுகுச் சிலையை அச்சில் வார்த்தது போல உருவாக்கி புத்தாடை அணிவித்து தனது தங்கைக்கு திருமண சீராக கொடுத்தார் அண்ணன் ஹனிக்குமார். இதனை சற்றும் எதிர்பாராத தங்கை தனது தந்தையை பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்டு, சிலையாக இருந்தாலும் தனது தந்தை தான் என நினைத்து கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். மேலும் சுப்பிரமணியன் அவர்களின் மனைவியும் தனது கணவரின் சிலையைப் பார்த்து நெகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் விட்டார். தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+