ப்ரீமியம் விஸ்கி ஐஸ்க்ரீம்.. ஹைதராபாத்தை கிறுகிறுக்க வைத்த போதை பார்லர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் விஸ்கி கலந்த ஐஸ்க்ரீமை தங்களின் ப்ரீமியம் ஐஸ்க்ரீம் என்று விற்ற பார்லரில் கலால் வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர். இந்த விஸ்கி ஐஸ்க்ரீம் குறித்து சமூகவலைதளங்களில் விளம்பரம் பதிவு செய்து, பள்ளி மாணவர்களை தங்களின் வாடிக்கையாளர்களாக மாற்றியுள்ளனர்.

ஐஸ்க்ரீம் பிடிக்காத நபர்கள் மிகவும் குறைவாகத்தான் இருப்பவார்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வித ஐஸ்க்ரீம் பிடிக்கும். வெண்ணிலா, சாக்லேட், பட்டர் ஸ்காட்ச், பிளாக் கரன்ட், ஸ்ட்ராபெரி, மேங்கோ, பிஸ்தா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ரக ஐஸ்க்ரீம்கள் உள்ளன. நமக்கு தெரிந்தும், தெரியாமலும் இப்படி ஏராளமான வகையிலான ஐஸ்க்ரீம்கள் இருக்கின்றன. ஐஸ்க்ரீமை வித்தியாச வித்தியாசமாக சாப்பிடுவதைக் கூட நாம் கேள்விப்பட்டிருப்போம்.

whiskey ice cream

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு பெண் ஐஸ்க்ரீமை சூடுபடுத்தி சாப்பிடுவது குறித்து சொன்னதும் வைரலானது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் அரிகோ கேஃபே (Ariko Cade) என்ற ஐஸ்க்ரீம் பார்லர் உள்ளது. சமீபகாலமாக அந்த ஐஸ்க்ரீம் பார்லர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

இதையடுத்து கலால் துறை அதிகாரிகள், அந்த ஐஸ்க்ரீம் பார்லரில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதை எதிர்பார்க்காத கடைக்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிகாரிகள் ஒரு இடம் கூட விடாமல் சல்லடை போட்டு சோதனை செய்தனர். இதில் 11.5 கிலோ அளவிலான சுமார் 23 விஸ்கி ஐஸ்க்ரீம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.,

இதுகுறித்து கலால் துறை அதிகாரிகள் கூறுகையில், சரத் சந்திர ரெட்டி என்பவர் தான் அந்த ஐஸ்க்ரீம் பார்லரை நடத்தி வருகிறார். அவர் சராசரியாக ஒரு கிலோ ஐஸ்க்ரீமில் சுமார் 60 மில்லி லிட்டர் விஸ்கியை கலந்து அதிக விலையில் விற்றுக் கொண்டிருந்தார். இந்த விஸ்கி ஐஸ்க்ரீம் தான் அவர்கள் பார்லரில் மிகவும் பிரபலமானது. இதுதொடர்பாக அவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் விளம்பரம் செய்து, அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள் அதிகளவில் வந்துள்ளனர். மாணவர்களுக்கு ஆல்கஹால் சம்மந்தப்பட்ட பொருள்களை விற்பது தவறு. அதனால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக சரத் சந்திர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகள் தயாகர் ரெட்டி, சோபன் ஆகியோரை கைது செய்துள்ளோம். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. என்று கூறியுள்ளனர்.

தெலங்கானாவில் சட்டவிரோத மதுபான விற்பனைக்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து ரெய்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஹைதராபாத் ஆர்டிசி கிராஸ் சாலையில் சட்டவிரோதமாக விற்க முயற்சி செய்த ரூ.3.85 லட்சம் மதிப்பிலான மதுபானத்தை கலால்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரில் போதை ஐஸ்க்ரீம் விற்ற கடையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி நடவடிக்கை எடுத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+