ஆளுநரை மதிக்காதவர்கள்.. குடியரசு தலைவரை மதிக்கவில்லை என்கிறார்கள்.. பாயிண்ட் பிடித்த தமிழிசை

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: ஆளுநரை மதிக்காதவர்கள் குடியரசு தலைவரை மதிக்கவில்லை என்கிறார்கள் என்று தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவதாக ஒரு சர்ச்சை ஏற்கனவே கிளம்பியிருந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

Those who never respect the Governor, Now says President not get the Respect - Tamilisai Soundararajan

நாட்டின் குடியரசு தலைவர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பதே பொருத்தமாக இருக்கும் என்பது எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது. பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கட்டிடம் திறக்கும் விழாவை புறக்கணிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புது நாடாளுமன்ற கட்டிடம் இன்னும் 200 ஆண்டுகள் இருக்கக் கூடியது. மக்கள் பிரச்சினை பற்றி பேசும் சபையான ஜனநாயகத்தின் கோவிலை புறக்கணிக்க வேண்டுமா? பிரதமரை விரும்பவில்லை என்றால்கூட ஜனநாயகத்தின் கோவிலை புறக்கணிப்பது நல்லதல்ல.

எனவே எதிர்க்கட்சிகள் அவர்களின் நிலைப்பாட்டை மக்களுக்காக மறுபரிசீலனை செய்ய வேண்டும். முறையான அழைப்பு அளிக்கப்படவில்லை என்ற அவர்களின் குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க வேண்டும். மக்களவையின் பொது செயலாளர் மூலமாக, சபாநாயகர் தரப்பில் இருந்து அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அது முறையல்ல என்கிறார்களா? அல்லது வேறு எதையும் எதிர்பார்க்கிறார்களா? என்பது புரியவில்ல" என்றார்.

Those who never respect the Governor, Now says President not get the Respect - Tamilisai Soundararajan

இந்நிலையில், தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இவ்விவகாரம் குறித்து பேசும் போது கூறியதாவது:- தெலுங்கானாவில் மிக சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக ஒரு சட்டப்பேரவை கட்டப்பட்டு அதை முதல்வர் சந்திர சேகர் ராவ் தான் திறந்து வைத்தார். அப்போது ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா.. எல்லோரும் கேள்வி கேட்டார்கள்? இல்லை...

முதல்வர் தான் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார். அதனால் முதல்வர் தான் ஆரம்பித்து வைப்பார்.. ஆரம்பித்து வைப்பார் என்பதற்கு கூட இல்லை. அழைப்பு கூட கொடுக்கவில்லை என்பதை நான் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். அரசியல் சார்பு இல்லாதவர் குடியரசுத்தலைவர் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அதுவே ஆளுநருக்கு ஏன் சொல்வது இல்லை.

ஆளுநர்கள் அரசியல் சார்பற்றவர்கள்.. நாங்கள் நடுநிலைதான் வகிக்கிறோம் என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்வது இல்லை. அப்போது முதல்வர் தான் என்று சொல்கிறீர்கள். ஆனால் குடியரசுத்தலைவர் என்று வந்தவுடன் பிரதமர் அரசியல் சார்புள்ளவராக இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். இதிலேயே முரண்பாடு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+