கரையில் மனைவி வீடியோ எடுக்க.. மைத்துனிகளுடன் தண்ணீரில் குளித்த இளைஞர்.. நீரில் மூழ்கி 3 பேரும் பலி
ஹைதராபாத்: கரையில் மனைவி வீடியோ எடுத்த போது மைத்துனிகளுடன் தண்ணீரில் குளித்த இளைஞர் உள்பட 3 பேர் பலியான சம்பவம் தெலுங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஜனாகான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபினாஷ் (31). இவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி திவ்யா. இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இவர், மனைவி திவ்யா, மைத்துனிகள் சங்கீதா (19), சுமலதா (15) ஆகியோரை அழைத்து கொண்டு 10 கி.மீ. தூரத்தில் உள்ள பொம்மபூர் ஏரிக்கு சனிக்கிழமை மதியம் சுற்றுலா சென்றனர்.

வீடியோ
அப்போது கோடை வெப்பத்தை தணிக்க இவர்கள் 4 பேரும் ஏரியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிறிது நேரத்தில் திவ்யா கரை பகுதியில் நின்று கொண்டு இவர்கள் மூவரையும் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

ஆழமான பகுதி
அப்போது மாமா அபினாஷ் மீது மைத்துனிகள் இருவரும் தண்ணீரை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென யாரும் எதிர்பாராதவிதமாக அபினாஷ் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார்.

திவ்யா அலறல்
உடனே அவரை பின்தொடர்ந்து மைத்துனிகளும் சென்றனர். அப்போது அபினாஷ் மூழ்குவதையும் அவரது மைத்துனிகள் அவரை காப்பாற்ற முயற்சிப்பதையும் கண்ட திவ்யா அலறினார்.

திவ்யா மயக்கம்
பின்னர் அவரது அலறல் சப்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது அந்த மூன்று பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கணவரின் உடலை பார்த்து திவ்யா மயக்கமடைந்தார். ஜாலியாக இருப்பதற்காக வந்த சுற்றுலா வீடியோ எடுத்த மோகத்தால் மூன்று பேரின் உயிரை பறித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications