தொண்டையை கிழித்த பென்சில்.. துடிதுடித்து உயிரிழந்த 6 வயது சிறுவன்! ஒரே நொடியில் எல்லாம் போச்சு
ஹைதராபாத்: பென்சிலை கையில் எடுத்துக் கொண்டு ஜாலியாக ஓடி வந்த சிறுவனுக்கு மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த பென்சில் எதிர்பாராத விதமாகத் தொண்டையைக் கிழித்த நிலையில், ரத்த போக்கு காரணமாகச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரணம் என்பது எப்படி யாருக்கு வரும் என்பதை யாராலும் சொல்லவே முடியாது. இதன் காரணமாகவே நம்ம ஊரில் பனை மரத்தில் இருந்து விழுந்தவர்களும் உள்ளனர்.. சும்மா வழுக்கி விழுந்து உயிரிழந்தோரும் உள்ளனர் என்று பலமொழி சொல்வார்கள். அப்படி எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்த சிறுவனின் உயிர் போயிருக்கிறது. இந்தச் சம்பவம் தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் நடந்துள்ளது.

ஷாக்
அங்குள்ள கம்மம் மாவட்டம் குசுமஞ்சி மண்டலத்தின் நாயகங்குடம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அந்தப் பள்ளியில் யூகேஜி படித்து வரும் 6 வயது சிறுவன் மெடரபாவு விஹார்.. அந்தச் சிறுவன் நேற்று யாருமே எதிர்பார்க்காத வகையில் துயர விபத்தில் உயிரிழந்தார். கையில் வைத்திருந்த பென்சில் கழுத்தில் பாய்ந்ததில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது
இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் நடந்துள்ளது.. மதிய இடைவேளைக்கு அந்தச் சிறுவன் கழிப்பறையைப் பயன்படுத்திவிட்டு கிளாஸ் ரூமிற்கு திரும்ப வந்து கொண்டு இருந்தான். கையில் பென்சிலை வைத்துக் கொண்டு ஜாலியாக அந்தச் சிறுவன் ஓடி வந்துள்ளான். அப்போது தான் அந்தத் துயரம் நடந்துள்ளது. எதிர்பாராத விதமாக அச்சிறுவன் வழுக்கி விழுந்துள்ளான்.
அப்போது அவன் கையில் வைத்திருந்த பென்சில் தொண்டையில் குத்தியுள்ளது. இதில் சிறுவனுக்கு மோசமான காயம் ஏற்பட்டுள்ளது. ரத்த நிற்காமல் போய்க் கொண்டே இருந்தது. கழுத்துப் பகுதி என்பதால் அந்தச் சிறுவன் வலியால் துடித்துள்ளான். சிறுவனின் அலறலைக் கேட்டு உடனடியாக விரைந்த பள்ளி ஊழியர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
உயிரிழப்பு
இருப்பினும், அங்குச் சிறுவனைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஹாஸ்பிட்டல் வரும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். அந்த பென்சில் சுவாசப் பாதையான மூச்சுக்குழாயைக் குத்தியிருப்பதாலும், இதனால் உடலுக்கு உள்ளே ரத்தப் போக்கு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாகச் சுவாசிக்க முடியாமல் சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் மரணத்திற்குப் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமா என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெட்டிசன்கள்
இது தொடர்பாக நெட்டிசன்களும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். சிறுவனின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள நெட்டிசன்கள், பெற்றோருக்கு ஆறுதல் கூறும் வகையில் பதிவிட்டு வருகிறார்கள். மேலும், சிலர் பள்ளி நிர்வாகம் கூடுதல் கவனத்தோடு இருந்திருக்க வேண்டும் என்றும் இந்த வயதில் இதுபோல கூர்மையான பொருட்களைத் தவிர்த்திருக்கலாம் என்றும் சொல்லி வருகிறார்கள்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications