ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு சந்திரசேகர் ராவ் ஆதரவு

Google Oneindia Tamil News

ஐதராபாத்: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிப்பதாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்.பி.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பணியில் ஆளும் பாஜகவும், காங்கிரஸ், திரிணாமூல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் முழு மூச்சாக இறங்கின'

குடியரசுத் தலைவர் தேர்தலில்.. செம ட்விஸ்ட்.. பாஜக வேட்பாளருக்கு ஜெகன் மோகன் ஆதரவு.. பரபர அறிவிப்பு குடியரசுத் தலைவர் தேர்தலில்.. செம ட்விஸ்ட்.. பாஜக வேட்பாளருக்கு ஜெகன் மோகன் ஆதரவு.. பரபர அறிவிப்பு

குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள்

குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள்

அதன் விளைவாக இன்று காலை முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா

யஷ்வந்த் சின்ஹா

பாட்னா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய யஷ்வந்த் சின்ஹா, ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று 24 ஆண்டுகள் பல்வேறு அரசு பதவிகளில் அங்கம் வகித்தவர். யஷ்வந்த் சின்ஹா 1986 ஆம் ஆண்டு பாஜகவில் அகில இந்திய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மத்திய நிதியமைச்சராகவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் யஷ்வந்த் சின்ஹா. மோடி - அமித்ஷா மீதான அதிருப்தியால் அக்கட்சியிலிருந்து விலகிய யஷ்வந்த் சின்ஹா திரிணாமூல் காங்கிரஸில் இணைந்து அக்கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்றார்.

 எந்தெந்த கட்சிகள் ஆதரவு?

எந்தெந்த கட்சிகள் ஆதரவு?

யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக அறிவிப்பது தொடர்பாக மம்தா பானர்ஜி எதிர்கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, திமுக, தேசியவாத காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட 13 கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தும் சந்திரசேகர் ராவ் கலந்துகொள்ளவில்லை. இதில் சரத் பவார், பரூக் அப்துல்லா, கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு மூவரும் இதற்கு சம்மதிக்காததால் யஷ்வந்த் சின்ஹாவை தேர்வு செய்யப்பட்டார்.

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆதரவு

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆதரவு

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சியின் எம்.பி. ஒருவர் ஆங்கில ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். கூட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டாலும் சரத் பவாருடன் சந்திரசேகர் ராவ் தொடர்பு வைத்திருந்ததாவும் அவர் கூறியுள்ளார். டிஆர்எஸ் கட்சிக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் 24,796 வாக்குகள் உள்ளதால் எதிர்க்கட்சிகளின் பலம் சற்று அதிகரித்துள்ளது.

English summary
TRS support opposition candidate Yashwanth sinha in President election: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிப்பதாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்.பி.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X