தனி விமானத்தில் ஐதராபாத் வந்த ஜார்க்கண்ட் எம்எல்ஏக்கள்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புமா புதிய அரசு

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: ஜார்க்கண்ட்டில் புதிய முதல்வராக இன்று சாம்பாய் சோரன் பதவியேற்றுக்கொண்டார். இவர் சட்டமன்றத்தில் தனக்கு இருக்கும் பெரும்பான்மையை காட்ட வரும் 5 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். இதனால், கூட்டணியில் உள்ள கட்சி எம் எல் ஏக்களை பாதுகாக்க தொடங்கியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் மீது நில சுரங்க முறைகேடு புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரித்த அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. 10 முறை சம்மன் அனுப்பிய நிலையில், அவர் கடந்த மாதம் 20ஆம் தேதி ஒரு முறை மட்டுமே அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.

 Trust vote to hold at Jharkhand assembly on Feb 5; Ruling alliance Party MLAs flown to Hyderabad

மீண்டும் விசாரணைக்கு ஆஜராகச் சம்மன் அனுப்பிய போதிலும் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் நேற்று ராஞ்சியில் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 7 மணி நேரம் வரை அவரிடம் விசாரணை நடந்த நிலையில், இறுதியில் நேற்று முன் தினம் இரவு கைது செய்யப்பட்டார். இதையடுத்து, ஜார்க்ண்ட் ஆளுநரான தமிழகத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனிடம் ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

தனி விமானத்தில்: இதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ்-ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி சார்பில் சாம்பாய் சோரன் முதல்வராகத் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சாம்பாய் சோரன் ஆட்சி அமைக்கவும் உரிமை கோரினார். இதையடுத்து, ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து அவரை பெரும்பான்மையை காட்ட வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ள்ளார். இதன்படி முதல்வராக பொறுப்பெற்ற சாம்பாய் சோரன் வரும் 5 ஆம் தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோருகிறார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதால் குதிரை பேரத்தை தடுப்பதற்காக ஜார்க்கண்ட் மாநில ஆளும் கட்சி கூட்டணி எம்பிக்கள் தனி விமானத்தில் தெலுங்கானா மாநிலத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

39 எம் எல் ஏக்கள்: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகளை சேர்ந்த 39 எம் எல்.ஏக்களும் இரண்டு தனி விமானங்களில் ஐதாரபாத் அழைத்து வரப்பட்டனர். எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஷமிர்பேட் பகுதியில் உள்ள லியோனியா ரிசார்ட்டிற்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். இரண்டு நாட்கள் இந்த ரிசார்ட்டில் எம் எல் ஏக்கள் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் அதன்பிறகு ஜார்க்கண்ட் சென்று நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பார்கள் எனவும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+