அதிகாலையிலே நடந்த சோகம்.. சூர்யா பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது 2 ரசிகர்கள் பலி
ஐதராபாத்: ஆந்திராவில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு பேனர் வைத்து கொண்டாட திட்டமிட்ட அவரது ரசிகர்கள் இரண்டு பேர், பேனர் கட்டும் போது மின்சாரம் பாய்ந்து பலியானது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. விஜய், அஜித்துக்கு அடுத்தப்படியாக அதிக ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ள சூர்யாவிற்கு தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு சினிமா உலகிலும் தனி மார்க்கெட் உண்டு. சூர்யாவுக்கு இன்று 48-வது பிறந்த நாளாகும். சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக இந்த வீடியோ அமைந்துள்ளது. சூர்யாவின் பிறந்த நாளை இன்று காலை முதலே அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களையும் அவரது ரசிகர்கள் செய்து வருகிறார்கள். அதுமட்டும் இன்றி சூர்யாவின் ரசிகர்கள் பேனர்கள் கட்டியும், போஸ்டர்கள் ஒட்டியும் கோலாகலமாக கொண்டாடுவதை பார்க்க முடிந்தது.
பல இடங்களில் சூர்யா ரசிகர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி சூர்யா பிறந்த நாளை கொண்டாடினர். அந்த வகையில், ஆந்திராவிலும் சூர்யாவின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடினர். இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது இரண்டு ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நரசாராவ்பேட்டை மண்டலத்தில் யாக்களவாரி பாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சூர்யாவின் பிறந்த நாளை அப்பகுதி இளைஞர்கள் உற்சாகமாக கொண்டாட திட்டமிட்டனர். அதன்படி, சூர்யாவின் பிறந்த நாளில் பிரம்மாண்ட பேனர் வைத்து அசத்தி விட வேண்டும் என்று முடிவு செய்தனர். இதற்காக கட் அவுட்களை ரெடி செய்து விட்டு இன்று அதிகாலை கட் அவுட்களை கட்ட ஆரம்பித்தனர்.

அப்போது கட் அவுட்டிற்கு பின்னால் இருந்த கம்பி மேலே சென்ற மின்சார வயரில் உரசியது. இதன் காரணமாக நொடிப்பொழுதில் கட் அவுட்டில் மின்சாரம் பாய்ந்தது. இதில், தூக்கி வீசப்பட்ட சூர்யா ரசிகர்களான வெங்கடேஷ் (வயது 19), சாய் (வயது 20) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள். சூர்யா பிறந்த நாளுக்கு பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications