ஒரு மீட்டிங்.. எல்லாம் ஓவர்! திடீரென காங் ரேவந்த் ரெட்டியை பார்த்த நாயுடு! அடுத்த வந்த மெகா ட்விஸ்ட்
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு இடையிலான சந்திப்பு தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ளது. இதில் பல எதிர்பார்க்காத முடிவுகள் எட்டப்பட்டு உள்ளன.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு சந்திப்பு நடத்தினர். ஒரு காலத்தில் நாயுடுவின் லெப்ட் ஹேண்டாக இருந்தவர் ரேவந்த் ரெட்டி. அதன்பின் தெலுங்கானா சென்று காங்கிரஸ் கட்சியில் தலைவராகி.. இப்போது முதல்வராகிவிட்டார்.

சரியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச முதல்வர்கள் ஹைதராபாத்தில் சனிக்கிழமை கூடி, ஜூன் 2014 இல் ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டதில் இருந்து இரு மாநிலங்களுக்கு இடையே நிலுவையில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி விவாதித்து தீர்வு காண முடிந்தது.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் மாலையில் பேகம்பேட்டில் உள்ள ஜோதிராவ் பூலே பிரஜா பவனில் சந்தித்துப் பேசினர். ரெட்டியுடன் தலைமை செயலாளர் பாட்டி விக்ரமார்கா, மூத்த அமைச்சர்கள் டி ஸ்ரீதர் பாபு, பொன்னம் பிரபாகர் ஆகியோர் உடன் இருந்தனர். நாயுடுவுடன் அமைச்சர்கள் கே துர்கேஷ், சத்ய குமார் யாதவ் மற்றும் பி சி ஜனார்தன் ஆகியோர் இருந்தனர்
பிரச்சனைகள் தீர்வு: இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்சனைகளை உடைக்கும் வகையில் இந்த சந்திப்பு நடந்ததாக தெலுங்கானா சிஎம்ஓ வட்டாரங்கள் தெரிவித்தன. இரு தரப்பும் தாங்கள் என்ன விவாதிக்க விரும்புகிறோம் என்பதை பரஸ்பரம் தெரிவித்ததுடன், அதை எவ்வாறு அடையலாம் என்பதற்கான வரைபடத்தையும் முன்வைத்தனர். கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு போன்ற மத்திய அரசின் தலையீடு தேவைப்படும் பிரச்னைகள் குறித்தும் விவாதித்தனர்.
விவாதம்: முக்கியமாக இரு அரசாங்கங்களும் பிரச்சினைகளை விவாதிக்க ஒரு தளம் மற்றும் அதிகாரப்பூர்வ அமைப்பை அமைப்பது பற்றி பேசினார் .இந்த சந்திப்பு நீண்ட விவாதங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளின் செயல்முறையைத் தொடங்குவதாகும். இரண்டு மாநில பிரச்சனைகளை சரி செய்யும் என்றும் கூறினார்.
நாயுடு, 2014 முதல் 2019 வரை தனது முதல் பதவிக் காலத்தில், மற்றும் 2014 முதல் 2023 வரை ஆட்சியில் இருந்த சந்திரசேகர ராவ் ஆகியோர் பிரச்சினைகளைத் தீர்க்க எந்த கூட்டத்தையும் நடத்த முடியாமல், ஒருவருக்கொருவர் விரோதமாக காணப்பட்டனர். அதன்பின் ஜெகன் மோகன் ரெட்டி வந்தும் இதை சரி செய்ய முடியவில்லை.
தற்போது அதெல்லாம் சரியாகி தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு இடையிலான சந்திப்பு தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
மீட்டிங்: இவர்கள் இருவரும் திடீரென சந்திப்பு நடத்தியது பெரிய விவாதங்களை நடத்தியது. இருவரும் இப்போதும் நெருக்கம் என்றாலும் காங்கிரஸ் முதல்வர் ஒருவர் - பாஜக கூட்டணியை ஆதரிக்கும், மோடி ஆட்சியில் இருக்க காரணமாக உள்ள நாயுடுவை சந்தித்தது எப்படி என்ற விவாதங்கள் எழுந்தன.
இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இருவரும் சந்திப்பு நடத்திய பின், பிரதமர் மோடி மற்றும் மத்திய மூத்த அமைச்சரவை உறுப்பினர்களை நேற்று சந்தித்துப் பேசினர். இவர்கள் இருவரும் மோடியிடம் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பின்வரும் கோரிக்கைகளை வைத்துள்ளார்: கிரேட்டர் ஹைதராபாத்தில் உள்ள 2,450 ஏக்கர் பாதுகாப்பு நிலத்தை அரசுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் ரேவந்த் ரெட்டி கேட்டுக் கொண்டார். இதற்கு மாற்றாக, ராவிரியாலில் உள்ள 2,462 ஏக்கர் மாநில அரசு நிலத்தை நிரந்தரமாக மாற்றுவதற்கு அவர் முன்வந்தார், அது தற்போது ஆராய்ச்சி மையமான இமாரத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
சிரவணப்பள்ளி நிலக்கரி சுரங்கத்தை ஏலப் பட்டியலில் சேர்க்கும் மத்திய அரசின் முடிவு குறித்து முதல்வர் கவலை தெரிவித்ததோடு, அதை அகற்றக் கோரினார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வைத்த கோரிக்கை: தொழில்துறை ஊக்குவிப்பு மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீட்டை கோரினார், மாநிலப் பிரிவின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. நியாயமற்ற மற்றும் அறிவியல் பூர்வமற்ற பிரிவினையின் விளைவுகளால் மாநிலம் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறது. அதற்காக நிதி ஒதுக்க வேண்டும்.
ஆந்திரப் பிரதேசத்தில் நிலுவையில் உள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
உள்கட்டமைப்புக்கான உடனடி நிதி, மூலதனச் செலவினங்களுக்கு கூடுதல் ஆதரவு, அமராவதியின் வளர்ச்சிக்கான நிதி மற்றும் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நிறுவ வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications