பீச்சில்.. தனிமையில் ஜோடி.. விடிய விடிய கற்பாறைகளின் இடுக்கில் அலறிய பரிதாப பெண்.. என்னதான் நடந்தது?
ஹைதராபாத்: இருள்சூழும் மாலை நேரத்தில்.. தன்னந்தனிமையில்.. கடற்கரையில்.. அதுவும் பாறையின் உச்சியில் உட்கார்ந்து, காதல் ஜோடி ஒன்று ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தது.. அந்த நேரத்தில் இப்படி ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது.
தனிமையில், கடற்கரையில் இருந்த பாறைகளின் மேல் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, தவறி பாறைகளுக்கு இடையே விழுந்து விட்ட காதலியை காப்பாற்றாமல் காதலன் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ளது அப்பிக்கொண்டா என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் பனிந்திரா என்ற இளைஞர்.. இவர் 18 வயது பெண் ஒருவரை காதலித்து வருகிறார்.. அந்த பெண் மச்சிலி பட்டணம் பகுதியை சேர்ந்தவர்.. அந்த பெண்ணும் பனிந்திராவை உயிருக்கு உயிராக விரும்பினார்.
காதல் விவகாரம்: இவர்களது காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவந்ததுமே பெற்றோர்கள் கொந்தளித்தார்கள்.. அதிலும், பெண்ணின் வீட்டில் ஆவேசமாகிவிட்டார்கள்.. மகளை கண்டித்தார்கள்.. இதனால் எரிச்சலடைந்த அந்த பெண், கடந்த 29-ந்தேதி, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் பதறிப்போன பெற்றோர், மகளை எங்கெங்கோ தேடிப்பார்த்தார்கள்.. எங்குமே கிடைக்காததால், மச்சிலிபட்டணம் போலீசில் புகார் தந்தனர்.
இந்த புகாரின்பேரில் போலீஸாரும் வழக்கை பதிவு செய்து, காணாமல் போன பெண்ணை தேட துவங்கினார்கள். அந்த பெண், நேராக தன்னுடைய காதலனிடம் செல்லவும், அவர் அந்த பெண்ணை அழைத்து கொண்டு, கோபாலபட்டினம் கிளம்பி போனார் பனிந்திரா.. அங்கேயே லாட்ஜ்ஜில் ரூம் எடுத்து காதலியுடன் தங்கினார்.. நேற்று முன்தினம், காதலியை அழைத்துக்கொண்டு, அப்பிக்கொண்டா பீச்சுக்கு போனார் பனிந்திரா.. அந்த பீச்சில் நிறைய கற்பாறைகள் இருக்கின்றன..
ராட்சத அலைகள்: குவியல் குவியலாக, மலைபோல் பாறைகள் குவிந்திருக்கும்.. பீச்சில் எழும்பும் ராட்சத அலைகள், இந்த கற்பாறைகளின் உச்சி வரை தழுவி செல்லும்.. அதனால், உயரமான மலைப்போன்ற பாறை பகுதிக்கு இருவருமே ஏறி சென்று உட்கார்ந்து கொண்டனர்.. இவர்கள் உட்கார்ந்திருந்த பாறைகளுக்கு கீழேயும் நிறைய கற்பாறைகள் உள்ளன.. காதல் ஜோடி தங்களை மறந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.. அப்போது, ராட்சத அலைகள் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தன.
அதில் ஒரு அலை வேகமாக வந்து, உயரத்தில் இருந்த பாறைகளில் மோதியது.. அந்த நீரின் வேகத்தில், இளம்பெண் தவறி கீழே விழுந்துவிட்டார்.. கீழ்ப்பகுதியிலுள்ள பாறைகளுக்கு நடுவே வசமாக சிக்கிவிட்டார்.. உடனடியாக பாறைகளிலிருந்து அவரால் எழுந்து வரமுடியவில்லை.. ராட்சத அலைகளும், உடனுக்குடன் வந்து கொண்டேயிருந்ததால், அந்த பெண் எங்கே விழுந்து கிடக்கிறார் என்பதை பனிந்திராவால் கண்டுபிடிக்க முடியவில்லை..
இவர்கள் பீச்சுக்கு போகும்போதே இருள் சூழ தொடங்கிவிட்டது.. நேரம் செல்ல செல்ல இருட்டிவிட்டதால், அந்த பெண்ணுக்கு என்ன ஆனது என்றே தெரியாமல் பனிந்திரா பயந்து போனார்..
பாறை இடுக்கு: அவரை காப்பாற்ற எந்தவிதமான முயற்சியையும் இவர் எடுக்கவும் இல்லை.. பிறகு அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார். ஆனால், அந்த பெண்ணோ, இரவெல்லாம் பாறைகளுக்கு நடுவில் சிக்கி, கதறியுள்ளார். விடிய விடிய கதறியிருக்கிறார்.. நைட் நேரத்தில் பீச்சில் யாருமே இல்லை.. மேலும், இரவு நேரத்தில் அலைகளின் எழுச்சி உக்கிரமாக இருந்ததாலும், அந்த கூக்குரல் யாருக்குமே கேட்கவில்லை.
விடிகாலை நேரத்தில்தான், மீன் பிடிப்பதற்காக, மீனவர்கள் வந்திருக்கிறார்கள்.. அப்போதும் அந்த பெண், கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.. அந்த சத்தம் கேட்டு, ஓடிச்சென்று பார்த்துள்ளனர்.. இளம்பெண்ணையும் படுகாயங்களுடன் மீட்டனர்.. பிறகு போலீசுக்கு விஷயத்தை சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து, மருத்துவமனையில் பெண்ணை அனுமதித்துள்ளனர்.. பிறகு, அவரது பெற்றோருக்கும் தகவல் தந்தனர்.
வாக்குமூலம்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், இளம்பெண்ணிடம் போலீசார் நடந்தது குறித்து விசாரித்திருக்கிறார்கள்.. காதலன்தான், பாறையிலிருந்து கீழே தள்ளிவிட்டாரா? என்று கேட்டிருக்கிறார்கள்..
அதற்கு அந்த பெண், "தெரியாமல் தவறி, நான்தான் பாறையில் விழுந்துவிட்டேன்.. என்னுடைய காதலன் பனிந்திராவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை" என்று வாக்குமூலம் தந்தார்.. எனினும், இந்த தகவல் உண்மைதானா? என்பதை விசாரிக்க, பனிந்திராவுக்கு போனை போட்டார்கள் போலீஸார்.. ஆனால், போலீஸின் போன் நம்பரை பார்த்துமே, மேலும் பயந்துபோன பனிந்திரா, போனை எடுக்கவேயில்லையாம்.
போலீசாரின் பிடியில் இருந்து காதலனை, அந்த பெண் காப்பாற்றியுள்ள நிலையில், காதலியை தவிக்க விட்டு, காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்காமல், தப்பி ஓடிய காதலனை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications