Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒதுக்குப்புறத்தில் மனைவி ஜோதி.. இளைஞருடன் கசமுசா.. பக்கத்தில் போன கணவர்.. அப்பறம் என்னாச்சு தெரியுமா

கள்ளக்காதல் ஜோடியை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சொல்ல சொல்ல கேட்காமல் கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியை, அடித்தே கொன்றார் கணவர்.. இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஹைதராபாத் அப்துல்லாபூர்மீத் வரிசிகூடா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாச ராவ்.. இவரது மனைவி பெயர் ஜோதி.. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த யட்லா யஸ்வந்த் என்பவர் ஜோதிக்கு அறிமுகமானார்.. யஸ்வந்த் ஒரு கார் டிரைவர் ஆவார்..

 ஸ்ரீனிவாசன்

ஸ்ரீனிவாசன்

ஆரம்பத்தில் இருந்த நட்பு, மெல்ல மெல்ல கள்ளக்காதலாக மாறியது.. ஒருநாள் இவர்களின் கள்ளக்காதல் ஸ்ரீனிவாசனுக்கும் தெரிந்துவிட்டது... இதனால் கொந்தளித்து போன ஸ்ரீனிவாசன் மனைவியை கண்டித்துள்ளார்.. ஆனால் ஜோதி கேட்கவில்லை.. இதுதொடர்பாக கணவன் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது... யஸ்வந்தை கைவிட முடியாது என்று ஜோதி கறாராக சொல்லிவிட்டார்.. இதனால் செய்வதறியாமல் விழித்த ஸ்ரீனிவாச ராவ், கள்ளக்காதல் ஜோடியை தீர்த்து கட்டிவிடலாம் என்று முடிவு செய்தார்.

 ஜோதியின் காதல்

ஜோதியின் காதல்

அதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நாள் குறித்தார்.. அதுவரை ஜோதிக்கு தன்மீது சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, அன்பாக பேச ஆரம்பித்தார்.. பாசமாக இருப்பது போல் நடித்தார்.. ஒருகட்டத்தில் யஸ்வந்த்தையும் புகழ ஆரம்பித்தார்.. "யஸ்வந்த் ரொம்ப நல்லவர்.. என்னைவிட அன்பானவர்.. அவர்தான் உனக்கு பொருத்தமானவர்.. அவருடன் உறவை தொடர்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என்று ஜோதியிடம் கனிவாக பேச ஆரம்பித்தார்..

 யஸ்வந்த் அவுட்டிங்

யஸ்வந்த் அவுட்டிங்

இதை அப்படியே ஜோதியும் நம்பினார்.. அதுமட்டுமல்லாமல், கணவன் இப்படியெல்லாம் புகழ்ந்து சொல்கிறார் என்று யஸ்வந்துக்கு போனை போட்டு அவ்வப்போது சொல்லி கொண்டே வந்தார் ஜோதி.. யஸ்வந்த்தும் இதை நம்பினார்.. ஸ்ரீனிவாசன் எதிர்பார்த்ததுபோலவே ஞாயிற்றுக்கிழமையும் வந்தது.. அன்றைய தினம் 7 மணிக்கு 3 பேரும் இரவு நேர அவுட்டிங் போகலாம் என்று ஜோதியை அழைத்தார்..

 கூகுள் பே

கூகுள் பே

அதற்கு ஜோதி, யஸ்வந்தும் ஓகே சொன்னார்கள்.. கள்ளக்காதல் ஜோடியை தனியாக வர சொல்லிவிட்டு, இன்னொரு பைக்கில் பின்னாடியே சென்றார் ஸ்ரீனிவாசன். பைக்கில் கள்ளக்காதலனுடன் ஜோதி சென்று கொண்டிருந்தார்.. வழியில் ஒரு செருப்பு கடையில் ஜோதி புதிய செருப்பு வாங்கினார்.. அதற்கு ஸ்ரீனிவாசனிடம் 5 ஆயிரம் ரூபாய் கூகுள் பே மூலம் வாங்கி கொண்டார். பிறகு மறுபடியும் பைக்கில் கள்ள ஜோடி கிளம்பியது..

 டார்ச் லைட்

டார்ச் லைட்

மறுபடியும் அந்த ஜோடி பைக்கை நிறுத்தி, புறநகர்பகுதியில் இரவை கழிக்க, ஒரு டார்ச் லைட், 3 பவர் பேக்குகளை வாங்கினர். கோட்டேகுடோம் புறநகர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய வெறிச்சோடிய பகுதிக்கு 3 பேரும் சென்றடைந்து விட்டனர்.. யஸ்வந்தும் சீனிவாசனும் தண்ணி அடித்தனர்.. யஸ்வந்தும் ஜோதியும் ஜாலியாக இருக்க வேண்டும் என்று சொல்லி, சற்று தொலைவாக சென்றனர்..

 பாறாங்கல்

பாறாங்கல்

அங்கு கள்ளக்காதல் ஜோடி தனியாக இருந்தபோது ஸ்ரீனிவாசன், ஒரு பெரிய பாறாங்கல்லை எடுத்து கொண்டு போய், யஸ்வந்த் மீது போட்டார்.. சம்பவ இடத்திலேயே யஸ்வந்த் உயிரிழந்தார்... பிறகு, மறைத்து வைத்திருந்த ஸ்க்ரூட்ரைவர் எடுத்து, ஜோதியை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு, விஜயவாடாவுக்கு தப்பிவிட்டார்.. அந்த 2 உடல்களும் அழுகிய நிலையில் 2 நாட்களாக அங்கேயே கிடந்தது.. செவ்வாய்க்கிழமைதான் உடல்கள் மீட்கப்பட்டு, அவர்கள் யார் என்று விசாரித்தபோது, ஸ்ரீனிவாசன் மனைவி என்பது தெரியவந்தது..

 கூகுள்பே

கூகுள்பே

மனைவி காணாமல் போய் 2 நாட்கள் ஆகியும் போலீசில் அவர் ஏன் புகார் தரவில்லை என்ற சந்தேகம் வலுத்ததையடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.. மேலும் ஜோதியின் செல்போனில் கூகுள்பே மூலம் 5000 ஆயிரம் ரூபாய் அனுப்பி இருந்ததையும் கண்டுபிடித்தனர்.. இறுதியில் ஸ்ரீனிவாசனை தேடி பிடித்து கைதும் செய்தனர்.. நடந்ததை எல்லாம் ஒன்றுவிடாமல் போலீசில் சொல்லிவிட்டார் ஸ்ரீனிவாசன்.. தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. இந்த இரட்டை கொலை சம்பவத்தினால் ஆந்திராவே நடுங்கிபோய் உள்ளது.

மர்ம உறுப்பு

மர்ம உறுப்பு

இதே ஆந்திராவில், நேற்று முன்தினம் இதேபோல கள்ளக்காதல் கொலை ஒன்று நடந்தது.. ராமச்சந்திரா ரெட்டி என்பவருக்கும் சந்தியாவுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை, சந்தியாவின் மகள் பிரியா என்பவர் பார்த்துவிட்டார்.. உடனே ஆத்திரத்தில், ராமசந்திர ரெட்டியின் மர்ம உறுப்பை பிளேடால் வெட்டிவிட்டார்.. வலி தாங்க முடியாமல் ராமசந்திரா ரெட்டி அலறியதும், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இந்நிலையில், அதே ஆந்திராவில் கள்ளக்காதலுக்காக இரட்டை கொலை நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+