என்ன கொடுமை.. கையை கட்டி கும்பிடு போட்ட சிரஞ்சீவி.. ஜெ பாணியில் சாட்டையை சுழற்றிய ஜெகன்.. பரபரப்பு!
ஹைதராபாத்: ஆந்திர பிரதேசத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை அம்மாநில மூத்த நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து சந்தித்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பில் சிரஞ்சீவி நடந்து கொண்ட விதம் ஆந்திர பிரதேசம் முழுக்க விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியின் ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயங்களில் எல்லாம் திரைத்துறை அவரின் கட்டுப்பாட்டில் இருந்ததாக ஒரு வாதம் வைக்கப்படும். முக்கியமாக உச்ச நடிகர்கள் பலர் ஜெயலலிதாவிற்கு எதிராக வாய் திறக்க முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகள் இருந்தன.
ஜெயலலிதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட ஒரு உச்ச நடிகர் பின்னர் ஜெயலலிதாவை சமாதானம் செய்வதற்காக அவரின் சேனலில் பட்டிமன்றம் நடுத்தும் அளவிற்கு நிலைமை சென்றதெல்லாம் வரலாறு.. அப்படி ஒரு வரலாறுதான் தற்போது ஆந்திராவில் நடந்து கொண்டு இருக்கிறது.

ஜெகன் மோகன்
ஆந்திர பிரதேசத்தில் மொத்த சினிமா திரையும் தற்போது ஜெகன் மோகனின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு சினிமா டிக்கெட் கட்டணங்களை அங்கு ஜெகன் அரசு குறைத்தது. சில இடங்களில் 100, சில இடங்களில் 50, 80 என்றெல்லாம் டிக்கெட் கட்டணங்களை அரசு நிர்ணயம் செய்தது. அதேபோல் 4 காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதி என்று உத்தரவிட்டது.

சிரஞ்சீவி
ஸ்பெஷல் காட்சிகள் வெளியிட அனுமதி இல்லை என்றும் ஜெகன் உத்தரவிட்டார். அங்கு ஏற்கனவே கொரோனா காரணமாக தெலுங்கு சினிமா இழப்பை சந்தித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்களை அசைத்து பார்த்தது. ஆனால் தெலுங்கு சினிமா நடிகர்களின் அரசியல் திட்டங்கள் காரணமாக ஜெகன் இப்படி செய்ததாக கூறப்படுகிறது. அவர்கள் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு சாதகமாக இருப்பதால் கோபம் அடைந்து ஜெகன் இப்படி ரூல்ஸ்களை போட்டதாக செய்திகள் வந்தன.

ஜெ பாணி
அதாவது ஜெ பாணியில் சினிமா உலகை ஜெகன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர இப்படி செய்தார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ஜெகனை "சமாதானம்" செய்யும் வகையில் அந்த மாநிலத்தின் டாப் ஸ்டார்கள் நேராக முதல்வரை சென்று சந்தித்தனர். டாப் ஸ்டார்கள் என்றால் பிரபாஸ், மகேஷ் பாபு, இயக்குனர் ராஜ் மவுலி, சிரஞ்சீவி உள்ளிட்டோர், இன்னும் பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் முதல்வரை சந்தித்தனர்.இதில் சினிமா டிக்கெட் விலை கட்டுப்பாட்டை நீக்க வேண்டும், ஷோ எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கெஞ்சி இருக்கின்றனர்.

கடும் கட்டுப்பாடு
இதில் சினிமா பிரபலங்களின் கோரிக்கையை ஒரு வழியாக ஜெகன் ஏற்றுக்கொள்வதாக கூறியதாக தெரிகிறது. அதே சமயம் இந்த சந்திப்பில் சிரஞ்சீவி நடந்து கொண்ட விதம் ஆந்திர பிரதேசம் முழுக்க விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.மூத்த நடிகர், அரசியல்வாதி (முன்னாள்) ஒருவர் ஜெகன் முன்னிலையில் கூனிக்குறுகி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பில் ஜெகன் மோகனை பார்த்து சிரஞ்சீவி கையெடுத்து கும்பிட்டார். இது வீடியோவாக வெளியாகி உள்ளது.

கையெடுத்து கும்பிட்டார்
தெலுங்கு சினிமாவை காப்பாத்துங்க அய்யா.. உங்கள் ஆசிர்வாதம் வேண்டும். நான் கையெடுத்து கும்பிடுறேன் என்று சிரஞ்சீவி கெஞ்சி கேட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2008ல் காலத்தில் பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை நடத்தி 2009லேயே 18 எம்எல்ஏக்கள் பலத்தோடு முதல்வராகும் கனவோடு இருந்தவர் சிரஞ்சீவி. 2011 அங்கு ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர்காங்கிரஸ் கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சியோடு பிரஜா ராஜ்ஜியம் கட்சியை இணைத்தார்.

வருத்தம்
அமைச்சராக இருந்த இவர் 10 வருடங்களுக்கு முன்பு வரை கூட ஆந்திராவின் முதல்வராக வாய்ப்பு உள்ளவர் என்று கருதப்பட்டார். ஆனால் அப்படிப்பட்ட சிரஞ்சீவி இப்போது சினிமா பிரச்சனை ஒன்றுக்காக முதல்வர் ஜெகனை கையெடுத்து கும்பிட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எங்கள் மனதை இது உடைக்கிறது.சிரஞ்சீவி முதல்வரை சந்தித்தது ஓகே.. ஆனால் அவர் கையெடுத்து கும்பிட்டு இருக்க கூடாது என்று அவரின் ரசிகர்கள் வருத்தமாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications