"எங்களால் முடியவில்லை".. அமைதியான ஜெகனே பொங்கி எழுந்துவிட்டாரே.. அணி திரளும் மாநில குரல்.. நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: வேக்சின் மற்றும் ஜிஎஸ்டி நிலுவை தொகையில் மாநில குரல்கள் எல்லாம் ஒன்றிய அரசுக்கு எதிராக கொஞ்சம் கொஞ்சமாக வலுக்க தொடங்கி உள்ளன. அதிலும் அமைதியாக இருந்த ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியே தற்போது மாநில முதல்வர்கள் ஒன்று சேர வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக தற்போது ஒவ்வொரு மாநிலமாக குரல் கொடுக்க தொடங்கி உள்ளன. மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, டெல்லி, பஞ்சாப், மஹாராஷ்டிரா என்று பல்வேறு மாநிலங்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக திரண்டு நிற்க தொடங்கி உள்ளன.

வேக்சின் கொடுப்பதில் மத்திய அரசின் பாகுபாடும், இக்கட்டான சூழ்நிலையில் கூட பல ஆயிரம் கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகையை திருப்பி கொடுக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவதும் மாநில அரசுகளை பொங்கி எழ வைத்து இருக்கிறது.

எப்படி

எப்படி

இப்போது மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசுகள் பொங்கி எழ நிறைய காரணங்கள் உள்ளன. முதல் விஷயம், கொரோனா வேக்சின். தொடக்கத்தில் வேக்சின் விநியோகத்தை கட்டுப்படுத்தி வந்த மத்திய அரசு, மாநிலங்களுக்கு போதிய வேக்சின் வழங்கவில்லை. அதோடு போதுமான வேக்சின்களை மத்திய அரசு ஆர்டர் செய்யவும் இல்லை.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றமே "பகுத்தறிவற்றது" என்று மத்திய அரசின் வேக்சின் கொள்கையை விமர்சிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது. வேக்சின் கொள்கையில் மத்திய அரசு தோல்வி அடைந்த நிலையில், மாநில அரசுகளே முன்வந்து வேக்சின் டெண்டர் விட்டது. ஆனால் எந்த ஒரு மாநிலத்திற்கும் இதுவரை முறையாக சர்வதேச வேக்சின் டெண்டர் கிடைக்கவில்லை.

டெண்டர் கிடைக்கவில்லை

டெண்டர் கிடைக்கவில்லை

டெண்டர் கோரும் நிறுவனங்கள் கூட, மருத்துவத்துறைக்கு தொடர்பு இல்லாத தரகு நிறுவனங்களாகவே இருக்கின்றன. பல மாநிலங்களின் டெண்டர் கோரிக்கைக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் பல பதில் கூட அனுப்பவில்லை. அதோடு இந்தியாவில் உள்ள மாநில அரசுகளுடன் வேக்சின் வியாபாரத்தில் ஈடுபட முடியாது, மத்திய அரசுக்கு மட்டுமே வேக்சின்களை நாங்கள் விற்பனை செய்வோம் என்று மாடர்னா மற்றும் பைசர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

 முடிந்தது

முடிந்தது

இந்த நிலையில்தான் மாநில அரசுகள் பல வேக்சின் குறித்து குரல் கொடுக்க தொடங்கி உள்ளன. மத்திய அரசே வேக்சின் வாங்கி தர வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து வருகின்றன. முதலில் கேரள முதல்வர் பினராயி விஜயன்தான் 11 பாஜக ஆளாத மாநிலங்களுக்கு கடிதம் எழுதினார். தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட், டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார்.

கடிதம்

கடிதம்

11 மாநில அரசுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வேக்சின் வாங்கி அதை மாநிலங்களுக்கு மத்திய அரசு இலவசமாக, முறையாக பங்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு தமிழ்நாடு அரசு ஆதரவு அளித்துள்ள நிலையில் மற்ற மாநிலங்களும் இதே கோரிக்கையை வைத்து வருகின்றன.

கோரிக்கை

கோரிக்கை

கேரள முதல்வரின் கோரிக்கையை அடுத்து ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் இதே கோரிக்கையை வைத்துள்ளார். எப்போது அமைதியாக இருக்கும் அவர்.. மாநில முதல்வர்களுக்கு மத்திய அரசுக்கு எதிராக பேசினால் அதில் பெருசாக குரல் கொடுக்க மாட்டார். ஆனால் அவரே இந்த முறை வேக்சின் விவகாரத்தில் பொங்கி எழுந்து இருக்கிறார்.

 என்ன சொன்னார்

என்ன சொன்னார்

கேரள முதல்வருக்கு பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதத்தில்.. நாங்களும் சர்வதேச டெண்டர் விட்டோம். ஆனால் யாருமே எங்கள் டெண்டருக்கு பதில் தரவில்லை. மத்திய அரசுதான் வேக்சின் வாங்கி தர வேண்டும். மாநில அரசுகள் இதில் ஒன்றாக சேர வேண்டும். மாநில அரசுகள் ஒன்றாக சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். நாம் இணைந்து பணியாற்ற வேண்டிய நேரம் இது ஜெகன் மோகன் "வராது வந்து மாமணி" போல மாநில உரிமைகள் குறித்து பேசி உள்ளார்.

நவீன்

நவீன்

ஜெகன் போலவே அமைதியாக ஒதுங்கி இருக்கும் ஒடிசாவில் நவீன் பட்நாயக்கும் திடீரென மாநில அரசுகள் ஒன்று சேர வேண்டும்.. மத்திய அரசிடம் வேக்சின் கேட்க வேண்டும். மத்திய அரசுதான் வேக்சின் வாங்கி நமக்கு வழங்க வேண்டும் என்று அதிரடியாக பேசி உள்ளார். எப்போது இப்படி எல்லாம் மாநில உரிமைகள் குறித்து பேசாத நவீன், ஜெகன் கூட இப்போது வெகுண்டெழ தொடங்கி உள்ளனர்.

நம்பிக்கை

நம்பிக்கை

முன்பெல்லாம் ஜெகன், நவீன் போன்ற முதல்வர்கள் ஒதுங்கி நின்ற போதும் மாநில தலைவர்கள் ஒன்றாக இணைந்து நின்றனர். இப்போது அவர்களும் ஒன்று சேர்ந்து இருப்பது இந்தியாவின் "பெடரல்" கொள்கைக்கு பெரிய பலம் சேர்த்து உள்ளது. தமிழ்நாடு, கேரளா, வங்கம் என்பதை தாண்டி பல மாநில அரசுகளின் குரல் கேட்க தொடங்கி இருப்பது புதிய நம்பிக்கையை விதைக்க தொடங்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+