உடம்பு மீது குருமூர்த்தி ஏறி உட்கார்ந்து.. சுடுநீரில் மனைவியை வேகவைத்து.. புட்டு புட்டு வெச்ச போலீஸ்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: மனைவியை கொன்று துண்டு துண்டாக்கி, குக்கரில் வேகவைத்த கணவனிடம் விசாரணை தீவிரமாகிறது.. இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் நடந்தது என்ன என்பது குறித்து, ராட்சகொண்ட காவல் ஆணையர் சுதீர் பாபு செய்தியாளர்களிடம் விவரித்திருக்கிறார்.

தெலங்கானா மாநிலம் மேட்சல் நகரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் குருமூர்த்தி, தன்னுடைய மனைவி மாதவியை அடித்து கொன்றார்.. இதுகுறித்து போலீசாரிடம் வாக்குமூலம் தந்திருந்தார்.

andhra pradesh wife cooker

அதாவது, மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, உடலை வெட்டி துண்டுகளாக்கி ஃபிரிட்ஜில் வைத்துள்ளார். பிறகு தெரு நாய் ஒன்றை கொன்று குக்கரில் வேகவைத்து, வெயிலில் காயவைத்து பவுடராக்கி, அந்த பொடியை கால்வாயில் கரைத்துள்ளார். இதற்கு பிறகு, இதேபோன்ற பாணியில் மனைவியை செய்துள்ளார்.

ரத்த மாதிரிகள்: வேறு மாநில தடய அறிவியல் துறை அதிகாரிகள், குருமூர்த்தி வீட்டில் சோதனை மேற்கொண்டு, ரத்த மாதிரிகள், தலைமுடி போன்றவற்றை எடுத்து, ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறார்கள். பாத்ரூம் ஹீட்டரில் இருந்து மாதவியின் தலைமுடி கண்டெடுக்கப்பட்டது குறித்து குருமூர்த்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதற்கு குருமூர்த்தி, மனைவியை வெட்டி துண்டுகளாக்கினேன். அதில் சில கடினமான உடல்பாகங்கள் இருந்ததால், அதை பக்கெட்டில் போட்டு, பாத்ரூம் ஹீட்டரில் தண்ணீரை சூடாக்கி, அதை கொட்டி, உடல் துண்டுகளை வேக வைத்தேன்.. பிறகு மறுபடியும் அந்த உடல் பாகங்களை குக்கரில் எடுத்து வேகவைத்து, காயவைத்து பவுடராக்கி சாக்கடையில் வீசினேன்" என்று கூறியிருந்தார்.

கமிஷனர் பேட்டி: இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் நடந்தது என்ன என்பது குறித்து, ராட்சகொண்ட காவல் ஆணையர் சுதீர் பாபு செய்தியாளர்களிடம் விவரித்திருக்கிறார்.

"குற்றம் சாட்டப்பட்ட குருமூர்த்தி, 15 வருடங்களுக்கு முன்பு ராணுவத்தில் பணிபுரிந்து அதன் பின்பு விருப்ப ஓய்வு வாங்கியிருக்கிறார். ஓய்வுக்கு பிறகு, ஐதராபாத்தில் குடியேறி, வெங்கட மாதவியை திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளுடன் ஜில்லாலகூடாவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால், மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார் குருமூர்த்தி.

குருமூர்த்தி: தன்னுடைய கொலை திட்டத்திற்கு சங்கராந்தி பண்டிகையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார். மனைவி, குழந்தைகளை உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பிள்ளைகள் இரண்டு பேரையும் உறவினர் வீட்டில் தங்கச் செய்த குருமூர்த்தி, மனைவி மாதவியுடன் கடந்த 15ம் தேதி இரவு வீட்டிற்கு திரும்பி வந்தார். 16ம் தேதி காலை 10 மணிக்கு, தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது.

அப்போது மாதவியின் தலைமுடியைப் பிடித்து தலையை சுவற்றில் மிகவும் பலமாக மோதியிருக்கிறார். இதில், மயங்கி விழுந்த மாதவி உடல் மீது ஏறி உட்கார்ந்து குருமூர்த்தி, கழுத்தை நெறித்து மூச்சுதிணறச் செய்து கொன்றிருக்கிறார்.. உடலை அப்புறப்படுத்துவதற்காக, வீட்டில் இருந்த பெரிய கத்தியை பயன்படுத்தி முதலில் கால், கைகள், தலை என்று மனைவியின் உடல்பாகங்களை தனித்தனியாக துண்டு துண்டாக வெட்டி, அவற்றை வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜில் வைத்திருக்கிறார்.

பக்கெட் சுடுநீர்: பிறகு ஃப்ரிட்ஜில் இருந்து வெளியில் எடுத்து பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெந்நீர் காய வைக்க பயன்படுத்தும் ஹீட்டரைப் பயன்படுத்தி, உடல் பாகங்களை நன்றாக கரையும் வரை வேக வைத்துள்ளார். அதன் பிறகு வெந்து கரைந்த உடல் பாகங்களை 10 லிட்டர் பெயிண்ட்டை, அந்த பக்கெட்டில் ஊற்றியிருக்கிறார்..

இரவு நேரமானதுமே, ஜல்லலகூடா ஏரிக்குக் கொண்டு சென்று அதில் உடல் பாகங்களை காயவைத்து பொடியாக்கி சின்ன சின்ன கவர்களில் வைத்து கரைத்துள்ளார். கரையாத எலும்பு துண்டுகளையும் அதே ஏரியில் வீசியிருக்கிறார். பிறகு வீட்டிற்கு வந்து துர்நாற்றம் வெளியே வராத வகையில் 4 மணி நேரம் வீட்டைச் சுத்தம் செய்து, ரூம் ஸ்ப்ரே அடித்துள்ளார் குருமூர்த்தி.

அம்மா எங்கே?: 17ம் தேதி காலை உறவினர் வீட்டில் இருந்து குழந்தைகளை மறுபடியும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.. குழந்தைகள் இருவரும், அம்மா எங்கே? என்று கேட்டிருக்கிறார்கள். அம்மா வெளியே போயிருக்காங்க என்று குழந்தைகளிடம் சொல்லி உள்ளார்.

பிறகு மனைவியை கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட பெட்ரூமை பூட்டி வைத்தார் குருமூர்த்தி.. குழந்தைகள் அங்கு செல்லாமல் தடுத்ததுடன், 2 நாட்களாக அம்மா வெளியில் சென்றிருப்பதாக குழந்தைகளை நம்ப வைத்துள்ளார். இந்த 2 நாளுமே மகளிடமிருந்து போன் வராததால், மாதவியின் பெற்றோர் குருமூர்த்தியை தொடர்பு கொண்டுள்ளனர்.

அதிர்ச்சி: மாதவி குறித்து சரியான பதிலை குருமூர்த்தி சொல்லவில்லை.. அதனால் நேரடியாகவே கிளம்பி, குருமூர்த்தி வீட்டுக்கு வந்துள்ளனர்.. அவர்களிடம், மாதவி வெளியே செல்வதாக சொல்லிவிட்டு போனார், நானும் மாதவியை தான் தேடிக் கொண்டிருக்கிறேன், ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாதவியின் பெற்றோர், போலீசுக்கு போய் புகார் தரலாம் என்று சொல்லியுள்ளனர்.

உடனே குருமூர்த்தியும், மாதவியின் பெற்றோர்களுடனேயே மீர்பேட் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, மனைவியை காணவில்லை என்று புகார் கொடுப்பது போல் நடித்துள்ளார். மாதவியை போலீசார தேடத் துவங்கியதுமே, போலீசாரின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் குருமூர்த்தி செயல்பட்டது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது..

ஆதாரங்கள்: அதனால் அவரை ஸ்டேஷனுக்கு வரவழைத்து விசாரித்தோம். அப்போதுதான் மனைவியை கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டி வேக வைத்து ஏரியில் கரைத்ததை ஒப்புக்கொண்டார். நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும், ப்ளூ ரே டெக்னாலஜியை பயன்படுத்தியும் தடயங்களை சேகரித்து, இந்த கொடூர கொலை செய்ததற்கான ஆதாரங்களை சேகரித்துள்ளோம்.

ஒரு மனிதனுக்குள் இவ்வளவு மோசமான மிகக்கொடூர மிருக புத்தி இருப்பது இதன்மூலம் தெரிகிறது. கைதான குருமூர்த்திக்கு விரைவில் அதிகபட்ச தண்டனை கிடைக்கும் வகையில் உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் வகையில் அறிக்கை தயார் செய்துள்ளோம். இனிமேல் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடாத வகையில் தண்டனை பெற்றுத்தருவதில் தீவிரம் காட்டி வருகிறோம்'' என்று காவல் ஆணையர் சுதீர் பாபு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+