கையை கட்டி, வாயை பொத்தி பலாத்காரம்! கூலிப்படையை ஏவி கணவரின் தோழியை சிதைத்த சந்தேக பெண்!
ஐதராபாத்: தெலங்கானாவில் கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறி திட்டமிட்டு கூலிப்படையை ஏவி அவரது தோழியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் கொண்டாப்பூர் ஸ்ரீராம் நகரில் வசித்து வருபவர் ராம் (வயது 32, பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமான இவர் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக படித்து வருகிறார். இவருடன் 25 வயது பெண்ணும் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார்.
இவர்கள் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் நெருக்கமான நண்பர்கள் ஆனார்கள். 25 வயது பெண் அடிக்கடி ராமை அவரது வீட்டுக்கு சென்று பார்த்து வந்தார். இதனால் ராமின் மனைவிக்கும் அவர் பழக்கம் ஆனார்.

சந்தேக மனைவி
இதனால் அந்த இளம்பெண், ராமின் குடும்பத்தில் ஒருவர் போல் மாறினார். இதற்கிடையே ராமின் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து வீட்டில் தங்கி ராமின் மனைவிக்கு அவர் உதவி செய்து வந்தார். அங்கு தங்கியே பயிற்சி பெற்று வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் வரை அவர் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் ராம், இளம்பெண்ணுக்கு இடையே கள்ளத்தொடர்பு இருக்கலாம் என ராமின் மனைவி சந்தேகப்பட்டார்.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
இதனால் இளம்பெண் மீது அவர் கோபமடைந்தார். இதனால் பிப்ரவரி மாதம் இளம்பெண்ணை வீட்டை விட்டு அனுப்பினார். இருப்பினும் ராமின் மனைவிக்கு ஆத்திரம் அடங்கவில்லை. இளம்பெண்ணை பழிவாங்க திட்டமிட்டு வந்தார். இந்நிலையில் மே 26ல் இளம்பெண்ணை வீட்டுக்கு வரும்படி ராமின் மனைவி அழைத்தார். 26ம்தேதி மாலை 4 மணியளவில், இளம்பெண் தனது பெற்றோருடன் சென்றார்.

பலாத்காரம்
இதையடுத்து பெற்றோரை வேறு இடத்தில் காத்திருக்க செய்த ராமின் மனைவி, இளம்பெண்ணிடம் தனியாக பேச வேண்டும் என தெரிவித்து அவரை மட்டும் அறைக்கு அழைத்து சென்றார். அங்கு 5 பேர் இருந்தனர். அவர்கள் இளம்பெண்ணின் வாயில் துணியை திணித்து, அவரை கட்டிப்போட்டு பலாத்காரம் செய்தனர். இதனை ராமின் மனைவி செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

மிரட்டல்
இதையடுத்து சம்பவம் குறித்து வெளியில் கூறக்கூடாது. கணவருடன் பழகக்கூடாது. மீறினால் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார். இதற்கிடையே தனக்கு நேர்ந்த சம்பவத்தை நினைத்து அந்த பெண் கதறி அழுதார். இதையடுத்து வெளியே இருந்த அவரது பெற்றோர் வந்து பார்த்தனர். இதையடுத்து 5 பேரும் வெளியே ஓடிவிட்டனர்.

6 பேர் கைது
மகளை மீட்ட பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே இளம்பெண் சார்பில் கச்சிபவுலி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமின் மனைவியை கைது செய்தனர். அதன்பிறகு பலாத்காரம் செய்த பிருத்வி விஷ்ணுவர்தன் (22), மனோஜ்குமார் (22), சையத்மஸ்தான் (25), ஷேக்முஜாஹித் (25), ஷேக்மவுலாலி (32) ஆகியோரையும் கைது செய்தனர்.

அதிர்ச்சி
முதற்கட்ட விசாரணையில் தனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக நினைத்த ராமின் மனைவி 5 பேருக்கு பணம் கொடுத்து அவரை பலாத்காரம் செய்ய வைத்தது தெரியவந்துள்ளது. இதனால் இந்த சம்பவம் பெரும் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications