ஆம்பள அஞ்சலியும்.. காதல் கொண்ட அர்ச்சனாவும்.. வீட்டை விட்டு ஓடி போய்.. ஒரு டிக்டாக் கூத்து!

டிக்டாக் தோழியுடன் திருமணமான பெண் மாயமாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: டிக்டாக் தோழி அர்ச்சனா வீட்டில் ஆண்வேடமிட்டு ஒரு வாரம் தங்கினார் அஞ்சலி.. அப்போதுதான், அர்ச்சனா - அஞ்சலியின் நெருக்கத்தை கண்டு அலறிப்போய்விட்டனர் குடும்பத்தினர்.. இப்போது, 2 பேருமே மாயமாகி உள்ளனர்.. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்திலுள்ள ஆதோணியை சேர்ந்த தம்பதி ரவிக்குமார் - அர்ச்சனா. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 13 வருடங்கள் ஆகிறது. புனித் என்ற 11 வயது, மகேஷ் என்ற 7 வயது மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் அர்ச்சனாவின் சகோதரி லக்ஷ்மி, பெங்களூருவில் ஒரு வேலையில் போய் செர்ந்தார். அங்கு அஞ்சலி என்பவருடன் நட்பு ஏற்பட்டது... இந்த நட்பு வீடு வரை தொடர்ந்தது.. இதனால் அர்ச்சனாவுடனும் போனில் பேச ஆரம்பித்தார்.

அர்ச்சனா

அர்ச்சனா

கொஞ்ச நாளிலேயே அஞ்சலியும், அர்ச்சனாவும் ரொம்பவும் நெருக்கமாகி விட்டனர்.. ஒன்றாக சேர்ந்து டிக்டாக் வீடியோவை பதிவிடும் அளவுக்கு வந்துவிட்டனர். அது மட்டுமல்ல.. அஞ்சலி ஒரு வாரத்திற்கும் மேலாக அர்ச்சனா வீட்டிற்கு வந்து தங்கும் அளவுக்கு இந்த நெருக்கம் வளர்ந்துவிட்டது.

நெருக்கம்

நெருக்கம்

இப்படி வீட்டில் வந்து தங்கும்போது, ஒரு ஆண் போல தன்னை காட்டி கொண்டு, பேசியே அர்ச்சனாவை மயக்கிஉள்ளார். பேன்ட்-ஷர்ட்-விக் என்றுதான் அர்ச்சனா வீட்டிற்குள் நடமாடி உள்ளார் அஞ்சலி. நட்பு அளவுக்கு மீறி எல்லை தாண்டுவதையும், தாறுமாறாக உறவு வளர்வதையும் குடும்பத்தினர் கண்டு அதிர்ந்தனர்.. அட்வைஸ் தந்தனர்.. 2 பேரையும் என்ன செய்தும் பிரிக்கவே முடியவில்லை.

ரவிக்குமார்

ரவிக்குமார்

அர்ச்சனாவிடம் இருந்து செல்போனையும் பிடுங்கி வாங்கி வைத்து கொண்டும் பலனில்லை. "என்னையும், அர்ச்சனாவையுமா பிரிக்கிறீங்க? உங்க குடும்பத்தில் இருந்து அர்ச்சனாவை பிரித்து காட்டுகிறேன்" என்று அஞ்சலி சபதமே போட்டுவிட்டார். அர்ச்சனாவின் கணவர் ரவிக்குமார் எவ்வளவோ அஞ்சலியை கேட்டுக் கொண்டும், அவர் மசியவில்லை.. ஒருகட்டத்தில், அர்ச்சனா கணவனிடம் சண்டை போட்டுக் கொண்டு, அம்மா வீட்டுக்கு போய்விட்டார்.

மாயம்

மாயம்

அங்கேயாவது ஒழுங்கா இருப்பார் என்று பார்த்தால், 2 குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு வெளியேறி விட்டார்.. எங்கே போனார் என்றே தெரியாமல் குடும்பத்தினர் தேடினர்.. இறுதியில் ஆதோனி முதலாவது நகர போலீசில் புகார் தந்தனர். அதேபோல அஞ்சலியையும் காணவில்லை.. அஞ்சலியும் அர்ச்சனாவும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு எங்கே போனார்கள் என்றே தெரியாத நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+