பெண் கால்நடை மருத்துவர் வன்புணர்வு.. பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை... ஹைதராபாத்தில் பயங்கரம்
பெண் கால்நடை மருத்துவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்
ஹைதராபாத்: பெண் கால்நடை மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற சம்பவம் ஹைதராபாத்தில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா ரெட்டி. ஷாம்ஷாபாத் பகுதியில் வசித்துவந்தார். இவர் ஒரு கால்நடை டாக்டர். கொல்லப்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்தவர்.

தினமும் ஆஸ்பத்திரிக்கு வீட்டிலிருந்து டூவீலரில்தான் சென்று வருவார். நேற்று இரவும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார் பிரியங்கா. அப்போது திடீரென டூவீலர் பஞ்சர் ஆகி உள்ளது.
நடுரோட்டிலேயே என்ன செய்வதென்று பிரியங்கா விழித்து நிற்க, அங்கிருந்த ஒரு லாரி டிரைவர் பிரியங்காவிற்கு உதவி செய்ய முன்வந்தார். உடனே தன் வீட்டுக்கும் வண்டி ரிப்பேர் ஆகிவிட்டதை பிரியங்கா சொல்லி உள்ளார். தன் தங்கையிடம் பேசும்போது "பைக் பஞ்சர் ஆயிடுச்சு... எனக்கு பயமா இருக்கு.. நான் டோல்கேட் பக்கமா தான் நிக்கிறேன்.. என்கிட்டே கொஞ்ச நேரம் நீ பேசிட்டே இரு' என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் சிறிது நேரத்தில் பிரியங்காவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டது.. வீட்டில் இருந்தவர்கள் இதனால் பதறி போய், சம்பவ இடத்துக்கு ஓடிவந்தனர். ஆனால், அங்கு பிரியாங்காவை காணவில்லை.. கலக்கம் அதிகமாகிய அவர்கள், உடனடியாக போலீசில் சென்று இதுகுறித்து புகார் தந்தனர்.
இதையடுத்து போலீசார் பிரியங்காவை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, ஹைதராபாத் - பெங்களூர் ஹைவே பகுதியில் ஷாத்நகர் பாலத்துக்கு அடியில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை பிரியங்காவின் பெற்றோருக்கு தெரிவித்துவிட்டு, பாலத்துக்கு அடித்தை மீட்க விரைந்தனர். யூகித்தபடியே அது பிரியங்காவின் சடலம்தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
பின்னர், இது சம்பந்தமான விசாரணையில், அடையாளம் தெரியாத சிலர் காரில் இந்தப் பகுதிக்கு பிரியங்காவை கடத்தி வந்து பலாத்காரம் செய்து பின்னர் எரித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் எதுவாக இருந்தாலும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில்தான் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications