ஒரு கையில் பீர், மறுகையில் சிகரெட்... காலையிலேயே போதையில் பெண்.. ரியல் இந்தியன் தாத்தாவின் சம்பவம்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் காலையிலேயே ஒரு கையில் பீர் பாட்டிலுடன், மறுகையில் சிகரெட்டுடன் சாலையில் ஹாயாக குடித்தபடி இளம் பெண் தனது காதலனுடன் அட்டூழியம் செய்ததை கண்ட முதியவர், அந்த பெண்ணிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும் நீ என் பொண்ணாக இருந்தால் உனக்கு இந்நேரம் செருப்பு பிஞ்சிருக்கும் என குடிகார பெண்ணை முதியவர் திட்டினார்.
இன்றைய இளைஞர்கள் சர்வ சாதாரணமாக பொது இடங்களில் மது அருந்துகிறார்கள். பெண்களுமே சர்வ சாதாரணமாக மது அருந்துவது அதிகரித்துள்ளது. பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதில் ஆண் பெண் பாகுபாடு எல்லாம் சுத்தமாக கிடையாது. மது அருந்துகிறோம். அதை ஒருவர் பார்க்கிறார்.. இது அசிங்கமான விஷயம் என்ற உணர்வே இப்போது இல்லாமல் போய்விட்டது. மது அருந்துவதை சமூகத்தில் சாதாரண நிகழ்வாக பார்க்கும் அளவிற்கு கலாச்சாரம் மோசமாக வளர்ந்து விட்டது.

வெள்ளிக்கிழமை இரவு மதுபான பார்களில் ஆண், பெண் பேதமில்லாமல் ஆட்டம் போடுவது, சனிக்கிழமைகளில் நகரத்தின் ஒதுக்குபுறம் உள்ள பங்களாக்களில் மது அருந்திவிட்டு அறைகுறை ஆடையில் குத்தாட்டம் போடுவது இந்தியாவின் பெருநகரங்களில் சர்வ சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. சனி மற்றும் ஞாயிறுகள் போதையை தேடும் நாட்களாக மாறிவிட்டது என்பது கசப்பான உண்மை. மற்ற நாட்களில் நிலைமை எப்படி இருக்கிறது.. அதுவும் மோசமாகவே இருக்கிறது. மன அழுத்தமாக இருக்கு என்று கூறி ஆண் பெண் இருவருமே தண்ணி அடிப்பது தினசரி சர்வ சாதாரணமாக நடக்கிறது.
அப்படித்தான் ஐடி உலகின் முன்னணி நகரங்களில் ஒன்றான தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. அங்குள்ள நாகோல் ஃபதுல்லாகுடா நெடுஞ்சாலையில் காலையிலேயே காதலனுடன் காரில் வந்த இளம் பெண் காரை விட்டு இறங்கி உள்ளார். ஒரு கையில் பீர் பாட்டில் மற்றும் மறுகையில் சிகரெட்டுடன் இருந்த பெண், கொஞ்சம் பீரை குடிக்கிறார். பின்னர் சிகரெட்டை பிடிக்கிறார்.. இப்படியாக இருந்த அந்த பெண்ணுடன் காதலன் பேசிக்கொண்டு ஜாலியாக செல்கிறார்.
அப்போது அந்த வழியாக காலையில் நடைபயிற்சிக்கு வந்த முதியவர், என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்ற தொணியில் அந்த பெண்ணிடம் பேசுகிறார். பொது இடத்தில் மது அருந்த வேண்டாம். உடனே இங்கிருந்து செல்லுங்கள்.. இது தப்புமா என்று மரியாதையாக சொல்கிறார்.
இதனால் கோபம் அடைந்த அந்த பெண், அந்த முதியவரிடம் ஆவேசமாக மது அருந்தியபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உனக்கு என்னய்யா உன் வேலையை பார்த்துக்கிட்டு போ என்ற தொணியில் முதியவரிடம் பேசுகிறார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த பெண், உங்கள் வீட்டு பிள்ளைகளிடம் இப்படித்தான் பேசுவீர்களா என்று கேட்கிறார்.
அதற்கு அந்த முதியவர், நீ என் பொண்ணா இருந்தால் உனக்கு இந்நேரம் செருப்பு பிஞ்சிருக்கும் என்கிறார். இதை சுற்றியிருந்தவர்கள் அப்படியே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த முதியவரை பாராட்டுவதுடன், அந்த இளம் பெண்ணை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன் ஒருவர்., கலாச்சாரம், சட்டம் மற்றும் தார்மீகம் போன்ற வாதங்கள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் பொது இடத்தில் யாராவது மது அருந்துவதை நீங்கள் கண்டால், காவல்துறையினரை அழையுங்கள்.. அவர்களை விரட்டி விடாதீர்கள். அவர்களை பார்த்து மற்றவர்களும் கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது என்றார்.
இன்னொரு நெட்சன் இதுபற்றி கூறுகையில், இந்த ஜோடிக்கு என்ன பிரச்சனை.. முதியவர் மரியாதையாக கேட்கும் போதே குடிப்பதை நிறுத்திவிட்டு போயிருக்க வேண்டும்.. அதைவிட்டு விட்டு அப்படி ஆக்ரோஷமாக ஏன் நடந்து கொள்ள வேண்டும். முதியவரிடம் மரியாதையாக நடந்த கொள்ள தெரியாவிட்டால், அவர்கள் கற்ற கல்வியால் என்ன பயன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே அந்த பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications