சொன்னா கேட்கமாட்டியா.. மனைவியிடம் பேசிய நண்பன்.. 'அந்த' உறுப்பை வெட்டி கொடூரமாக கொன்ற கணவன்

இந்த பிரச்னை குறித்து பேசுவதற்காக இருவரும் ஒன்றாக மது அருந்திய போது வாக்குவாதம் வெடித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானாவில் இளைஞர் ஒருவர் தனது மனைவியின் முன்னாள் காதலனை தலை, விரல்கள், ஆணுறுப்பு என துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஹரிஹர கிருஷ்ணா. இவர் தில்சுக்நகரில் உள்ள கல்லூரியில் பயின்று வந்தபோது நவீன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது இந்நிலையில் இவர்கள் இருவரும் அதே கல்லூரியில் பயின்று வந்த பெண்ணை காதலித்துள்ளனர். இந்த விஷயத்தில் நவீன்தான் முதலில் காதலை தெரிவித்துள்ளார். அப்பெண் நவீனின் காதலை ஏற்ற நிலையில் சுமார் 2 ஆண்டுகளாக இந்த காதல் நீடித்து வந்திருக்கிறது.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவர்களுக்குள் சண்டை உருவாகியிருக்கிறது. முதலில் சிறியதாக தொடங்கிய இந்த சண்டை பின்னாட்களில் பெரியதாக வெடித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்துவிடுவதென முடிவெடுத்துள்ளனர். இவ்வாறு பிரிந்த பின்னர் சில நாட்கள் கழித்து நவீனின் நண்பனான ஹரிஹர கிருஷ்ணாவை இப்பெண் திருமணம் செய்துள்ளார். இதற்கு முன்னர் வரை நண்பர்களாக இருந்த இவர்கள் இந்த திருமணைத்தையடுத்து பிரிந்துவிட்டனர்.

திருமணம்

திருமணம்

திருமணத்தையடுத்து இருவரும் எவ்வித பிரச்னையும் இன்றி வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், நவீன் அடிக்கடி இப்பெண்ணுக்கு போன் செய்வதும், மெஸேஜ் செய்வதுமாய் இருந்திருக்கிறார். இது அமைதியாய் இருந்த வீட்டில் புகைச்சலை கிளப்பியிருக்கிறது. நவீனிடம் இதுபோன்று அடிக்கடி போன், மெஸேஜ் செய்ய வேண்டாம் என்று ஹரிஹரன் எச்சரித்துள்ளார். ஆனால் நவீன் இதனை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. எனவே போன், மெஸேஜ் தொடர்ந்திருக்கிறது. சரி நவீனிடம் சொல்லிதான் வேலைக்கு ஆகவில்லை எனவே மனைவியிடம் சொல்லலாம் என்று கண்டித்திருக்கிறார். ஆனால் மனைவியும் இதனை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.

கொலை

கொலை

எனவே ஆத்திரமடைந்த ஹரிஹரன் மனைவியை அடிக்க தொடங்கியுள்ளார். சண்டை ஒரு கட்டத்தில் பெரியதாக, ஹரிஹரனை எதிர்க்கவே அப்பெண் நவீனிடம் பேச தொடங்கியுள்ளார். சூழல் இவ்வாறு இருக்க, இது குறித்து பேச வேண்டும் என ஹரிஹரன் நவீனை அழைத்திருக்கிறார். நவீனும் இதனை நம்பி சென்றிருக்கிறார். இருவரும் நன்றாக குடித்திருக்கிறார்கள். பின்னர் இவர்களுக்கிடையில் வாக்குவாதம் எழுந்திருக்கிறது. ஹரிஹரன் தனது பிடியில் உறுதியாக இருந்திருக்கிறார். அதாவது தனது மனைவிக்கு அடிக்கடி போன் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்.

கைது

கைது

ஆனால் நவீன் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே நிலை தடுமாறிய ஹரிஹரன், நவீனை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் நவீனின் இதயம், ஆணுறுப்பு மற்றும் விரல்களை துண்டு துண்டாக வெட்டி அதனை புகைப்படம் எடுத்து தனது மனைவிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதனை கண்ட மனைவி அதிர்ச்சியில் உறைந்து போக, ஹரிஹரன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

நவீனின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தனது மனையிவிடம் தொடர்ந்து போன் செய்து பேசி வந்த நண்பனை, சக நண்பனே துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+