லவ் பண்ணி ஏமாத்த பாக்குறியா? மன்மதனாய் மாறிய 2k கிட் சைக்கோ! கால்வாய்க்குள் காத்திருந்த அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத் : தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே திருமணத்திற்கு மறுத்ததால் தான் காதலித்த பெண்ணையே பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரை கொலை செய்து கால்வாயில் புதைத்த அதிர்ச்சி சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்த பல அதிர்ச்சி சம்பவங்களால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பாஜக கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் இந்த விவகாரத்தில் தெலுங்கானா அரசு தோல்வி அடைந்து விட்டதாக பகிர் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.

தெலுங்கானாவில் அதிர்ச்சி

தெலுங்கானாவில் அதிர்ச்சி

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் அரங்கேறி இருக்கும் ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது பரபரப்பை மேலும் கூட்டி இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் வனபருத்தி பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஸ்ரீசைலன் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி ஒருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி பள்ளி காலத்தில் இருந்தே ஸ்ரீசைலனுடன் பழகி வந்த நிலையில் இருவரும் பல இடங்களில் சுற்றி திரிந்து காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் காதலிப்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவியின் வீட்டுக்கு தெரியவந்துள்ளது.

கல்லூரி மாணவி

கல்லூரி மாணவி

இதையடுத்து அவரை காதலிக்க கூடாது என பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த மாணவி ஸ்ரீசைலனை சந்திப்பதை தவிர்த்ததோடு தொலைபேசியிலும் பேசுவதை தவிர்த்து இருக்கிறார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி அந்த மாணவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட இளைஞரான ஸ்ரீசைலன் உன்னை என்னால் மறக்க முடியவில்லை ஐந்து ஆண்டுகளாக நாம் எப்படி எல்லாம் காதலித்தோம் இப்போது பேசாமல் இருப்பது ஏன் என உருக்கமாக பேசியதோடு கடைசியாக ஒரே ஒரு முறை என்னை நீ சந்திக்க வேண்டும் அதன் பிறகு உன் இஷ்டம் போல உன் பெற்றோர் பேச்சை கேட்டு நடந்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

இதையடுத்து தோழி ஒருவரின் வீட்டுக்கு செல்வதாக அந்த கல்லூரி மாணவி தனது பெற்றோரிடம் கூறிவிட்டு தனது காதல் அணை சந்திக்க சென்றிருக்கிறார். தனது இரு சக்கர வாகனத்தில் அந்த மாணவியை அமர வைத்த ஸ்ரீசைலன் ஊருக்கு வெளிப்புறமாக இருக்கும் ஒரு அடர்ந்த காட்டுப்பகுதிக்கு அழைப்புச் சென்றுள்ளார். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன அந்த மாணவி தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என கூறிய போது காதலித்து விட்டு என்னையவே ஏமாற்றுகிறாயா என மிரட்டியதோடு அந்தப் பெண்ணை கற்களால் கடுமையாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

அதிரடி கைது

அதிரடி கைது

இதனால் அச்சமடைந்த அந்தப் பெண் தனது செல்போனை எடுத்து காவல் துறையில் புகார் செய்யப் போவதாக கூறி இருக்கிறார். இதனால் கடும் கோபம் அடைந்த ஸ்ரீசைலன் ஒரு பெரிய கல்லை எடுத்து அந்த பெண்ணை தாக்கியதோடு அவரது துப்பட்டாவிலேயே கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும் தனது உறவினர் ஒருவரை வரவழைத்து கால்வாயில் குழி தோண்டி இளம் பெண்ணின் உடலை அதில் புதைத்து விட்டு தலைமறைவானார். இந்த நிலையில் தங்களது மகளை காணவில்லை என பெற்றோர் புகார் அளித்த நிலையில் அவரது செல்போன் எண்ணில் இருந்து அனுப்பிய மெசேஜ்களை போலீசார் ஆராய்ந்தனர். இதை அடுத்து ஸ்ரீசைலன் இளம்பெண்ணை கொலை செய்தது தெரிய வந்தது தொடர்ந்து தேர்தல் வேட்டை நடத்திய போலீசார் வனப்பகுதியில் தனது நண்பர் சிவா என்பவருடன் பதுங்கியிருந்த ஸ்ரீசைலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியின் சடலத்தையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+