எலக்சன் சீரியஸ்..வரிசைல வர மாட்டியா? வாக்காளருக்கு அடி.. ஒய்எஸ்ஆர் எம்எல்ஏவை காதோடு அப்பிய வாக்காளர்
அமராவதி: நான்காம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவோடு ஆந்திர சட்டசபை தேர்தலும் நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர் ஒருவரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஒருவர் கன்னத்தில் அறைந்ததும் பதிலுக்கு வாக்காளர் அவர் கன்னத்தில் அறைந்தது என வாக்குச்சாவடி மையமே பரபரப்பாக காணப்பட்டது.
ஆந்திரா பிரதேசத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் 2841 வேட்பாளர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். இன்று ஒரே கட்டமாக 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் ஆனது நடைபெற்று வருகிறது.

ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி - தெலுங்கு தேசம் பாஜக ஜனசேனா -காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளும் என 3 அணிகள் சட்டமன்ற தேர்தலில் களம் காண்கின்றன.
நேரடி போட்டி: ஆந்திர தேர்தலில் மும்முனை போட்டி நிலவுவதாக கணிக்கப்பட்டாலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் மக்களவைத் தொகுதிக்கு 454 பேரும் 175 சட்டமன்ற தொகுதிகளில் 2387 பேரும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக விசாகப்பட்டினம் எம்பி தொகுதியில் 33 வேட்பாளர்களும் ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியில் 12 வேட்பாளர்களும் போட்டிருக்கின்றனர்.
வாக்குப் பதிவு தீவிரம்: காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பல மாவட்டங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை பார்க்க முடிகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து பெண்கள் முதியவர்கள் இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே கடும் மோதல் வெடித்து வருகிறது. சில இடங்களில் அடிதடி சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன.
வன்முறை சம்பவங்கள்: தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவும் நிலையில் பல வாக்குச்சாவடிகளில் காவல்துறை கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவை வாக்காளர் ஒருவர் கன்னத்தில் பளார் என அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தெனாலி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருக்கும் அன்னப்பத்துணி சிவகுமார் இன்று தனது வாக்கினை செலுத்துவதற்காக குண்டூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தெனாலி சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்றார்.
Voter who objected to #Guntur District #TenaliMLA #Sivakumar jumping queue, was slapped by him & voter returned in kind; ugly show of political musclepower as the @ysrcp MLA candidate's henchmen joined attack on voter #BoothViolence #ElectionsWithNDTV #AndhraPradeshElections2024 pic.twitter.com/Z5wK0enrWK
— Uma Sudhir (@umasudhir) May 13, 2024
வாக்காளரை தாக்கிய எம்எல்ஏ: அப்போது ஏராளமான வாக்காளர்கள் வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் தான் விஐபி எனக்கூறி எம்எல்ஏ சிவக்குமார் நேரடியாக வாக்களிக்க சென்றார். அப்போது வாக்காளர் ஒருவர் தாங்கள் வரிசையில் நிற்கும் போது நீங்கள் மட்டும் எப்படி செல்லலாம் வரிசையில் நின்று வாக்களியுங்கள் எனக் கூறினார். இதனால் முறைத்துப் பார்த்தவாறு அந்த வாக்காளர் அருகில் சென்ற போது திடீரென கன்னத்தில் பளார் என அறைந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த வாக்காளர் எம்எல்ஏ வை திருப்பி அடித்தார்.
வாக்காளர் மீது தாக்குதல்: இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் வாக்காளரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கிருந்த சக வாக்காளர்கள் பரபரப்படைந்த நிலையில் காவல்துறை அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒய்எஸ்ஆர் குண்டர்கள் எப்படி மக்களை தாக்குகிறார்கள் பாருங்கள் என தெலுங்கு தேசம் கட்சியினர் இந்த வீடியோவை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications