நாடு முழுவதும் 1.25 லட்சம் “போஸ்ட் ஆபிஸ் ஏ.டி.எம்”.. விரைவில்
டெல்லி: நாடு முழுவதும் உள்ள 1.25 லட்சம் அஞ்சலங்களில் ஏடி.எம். மற்றும் மைக்ரோ ஏ.டி.எம் இயந்திரங்கள் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது என்று லோக்சபாவில் இன்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏடி.எம் இயந்திரங்கள் தொலைவான இடங்களில் இருப்பதால் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து லோக்சபாவில் சில உறுப்பினர்கள் இன்று கேள்வி எழுப்பிய போது, அஞ்சல் அலுவலகங்களில் ஏ.டி.எம் இயந்திரங்கள் நிறுவும் திட்டம் பற்றி குறிப்பிடப்பட்டது.

தொடர்ந்து உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலளித்த நிதித்துறைக்கான மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சின்கா, "வங்கி மித்ரா பணிகளுக்காக வங்கிகளில் போதுமான ஊழியர்கள் இல்லாத கிளைகளில், இந்த பணிகளுக்காக தற்காலிகமாக ஊழியர்கள் நியமிக்கப்படுவர்" என்றார்.
பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலியிடங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயந்த் சின்கா, நிலுவையில் உள்ள பணியிடங்களை நிரப்ப 60 ஆயிரம் ஊழியர்கள் பணி நியமனம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
பொதுத்துறை வங்கிகளில் முறையே 2013-14, 2014-2015, 2015-2016 ஆகிய ஆண்டுகளில் முறையே 38,254, 38,170 மற்றும் 21,500 காலியிடங்கள் ஏற்பட்டன. இந்த ஆண்டுகளில் ஆட்சேர்ப்பு 35,549, 30,359, மற்றும் 24,133 ஆக இருந்தது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications