விமானம் மூலம் களமிறக்கப்பட்ட 10,000 இந்தியா வீரர்கள்.. காஷ்மீரில் பதற்றம்.. ஆளுநர் விளக்கம் என்ன?
காஷ்மீரில் இந்திய ராணுவ படையினர் 10000 பேர் குவிக்கப்பட்டு இருப்பதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
Recommended Video

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ படையினர் 10000 பேர் குவிக்கப்பட்டு இருப்பதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 14ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் மொத்தம் 40 சிஆர்பிஎப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் காஷ்மீரில் மிகவும் பதட்டமான சூழ்நிலையை நிலவி வருகிறது. தற்போது இந்திய ராணுவப்படை அங்கு தொடர்ந்து அதிக அளவில் எல்லை அருகே குவிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு படைகள்
மொத்தம் 10000 வீரர்கள் தற்போது காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையால் களமிறக்கப்பட்டு இருக்கிறார்கள். பாராமிலிட்டரி, சிஆர்பிஎப் உள்ளிட்ட பல்வேறு படை பிரிவுகளை சேர்ந்த 10000 வீரர்கள் அங்கு திடீரென்று கடந்த வெள்ளிக்கிழமை களமிறக்கப்பட்டனர். இவர்கள் எல்லோரும் விமானம் மூலம் அங்கு கொண்டு செல்லப்பட்டனர்.

என்ன பதற்றம்
இப்படி காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்படுவதால் அங்கு மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதுவரை இந்த படைப்பிரிவை சேர்ந்தவர்கள் 130க்கும் அதிகமான காஷ்மீர் பிரிவினைவாதிகளை கைது செய்து இருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை இரவு மட்டுமே 100 பேர் வரை காஷ்மீரில் கைது செய்யப்பட்டனர்.

விளக்கம்
இதனால் காஷ்மீரில் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. இந்திய அரசுக்கு போருக்கு தயாராகிறதா என்ற கேள்விகள் எழுந்தது. ஆனால் காஷ்மீர் ஆளுநர் சத்யா பால் மாலிக் இதை மறுத்து உள்ளார். அதன்படி, இது சாதாரண பாதுகாப்பு நடவடிக்கைதான் என்று, தேர்தலின் போது எப்போதும் போல் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கைது விளக்கம்
தாக்குதல்கள் காரணமாக காஷ்மீரில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே இதேபோல் காஷ்மீரில் பிரிவினைவாதிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது வழக்கமான நடவடிக்கைத்தான். சமீபத்திய தாக்குதலை அடுத்துதான் தற்போது பிரிவினைவாதிகள் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றபடி இது தொடர்பாக வதந்திகளை நம்ப வேண்டாம், என்று கூறியுள்ளார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications