இந்தியாவில் புதிய சரித்திரம்? 11-வது முறையாக மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி?
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் அரசியல் குழப்பங்கள், இன வன்முறைகளால் இதுவரை10 முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே அதிக முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் மணிப்பூர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலம் கடந்த 2 மாதங்களாக வன்முறை சம்பவங்களால் பற்றி எரிகிறது. மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையை கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் ஆளும் பாஜக அரசு உள்ளது. மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டும் பலனளிக்கவில்லை.

இதனையடுத்து மணிப்பூர் மாநில முதல்வர் பைரேன்சிங் தமது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுக்க இருக்கிறார் பைரேன்சிங். மேலும் மணிப்பூர் ஆளும் பாஜக அரசை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை பரிந்துரைக்கவும் பைரேன்சிங் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டால் 11-வது முறையாக ஜனாதிபதி ஆட்சி இம்மாநிலத்தில் அமல் செய்யப்படும். நாட்டிலேயே ஜனாதிபதி ஆட்சியை அதிக முறை எதிர்கொண்ட மாநிலமாகவும் மணிப்பூர் இருக்கும்.
மணிப்பூரில் இதுவரை ஜனாதிபதி ஆட்சி:
1) 1967-ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி முதல் 1967 மார்ச் 19-ந் தேதி வரை ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது. அப்போது மணிப்பூர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
2) மணிப்பூர் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில் ஆட்சி கவிழ்ந்தது. இதனால் மீண்டும் 2-வது முறையாக 1967-ம் ஆண்டு அக்டோபர் 25-ந் தேதி முதல் 1968-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதி வரை மொத்தம் 118 நாட்கள் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
3) மணிப்பூர் மாநிலத்துக்கு மாநில தகுதி வழங்க கோரி ஆயுத கிளர்ச்சியில் சில குழுக்கள் ஈடுபட்டதால் மாநில சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 3-வது முறையாக 1969-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி முதல் 1972-ம் ஆண்டு மார்ச் 22-ந் தேதி வரை 2 ஆண்டுகள், 157 நாட்கள் ஜனாதிபதி ஆட்சி நடைமுறையில் இருந்தது.
4) அரசியல் குழப்பங்களில் 4-வது முறையாக 1973-ம் ஆண்டு மார்ச் 28-ந் தேதி முதல் 1974-ம் ஆண்டு மார்ச் 3-ந் தேதி வரை மொத்தம் 340 நாட்கள் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
5) ஆட்சி கவிழ்ந்த நிலையில் 1977-ம் ஆண்டு மே 16-ந் தேதி முதல் 1977-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி வரை 5-வது முறையாக ஜனாதிபதி ஆட்சி அமலானது. அப்போது 43 நாட்கள் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது.
6) 1979-ம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி முதல் 1980 ஜனவரி 13-ந் தேதி வரை மொத்தம் 60 நாட்கள் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது.
7) அரசியல் குழப்பங்களால் 1981-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி முதல் 1981 ஜூன் 18-ந் தேதி வரை 110 நாட்கள் 7-வது முறையாக ஜனாதிபதி ஆட்சி அமலானது.
8) 10 ஆண்டுகளுக்கு பின் 1992-ம் ஆண்டு ஜனவரி 7-ந் தேதி முதல் 1992-ந் தேதி ஏப்ரல் 7-ந் தேதி வரை 91 நாட்கள் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது.
9) 1993-ம் ஆண்டு நாகா- குக்கி இனக்குழுவினரிடையே மிக மோசமான மோதல் நிகழ்ந்தது. இம்மோதல்களில் சுமார் 1,000 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் 1993-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி முதல் 1994-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி வரை மொத்தம் 347 நாட்கள் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது.
10) மணிப்பூரில் அரசு பெரும்பான்மை இழந்த நிலையில் 10-வது முறையாக, 2001-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி முதல் 2002-ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி வரை மொத்தம் 277 நாட்கள் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications