For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி சர்க்காரின் 100 நாட்கள்.. சாதனைகள் என்ன?

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்து 100 நாட்களாகிவிட்டது.. மோடி சர்க்கார் பதவியேற்பு விழாவுக்கு முதல் முறையாக சார்க் தலைவர்களை அழைத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

100 days of Narendra Modi government

மோடி தலைமையிலான 100 நாள் அரசின் 'பேசப்படும் சாதனைகள்' இவை:

  • பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்து வெளியுறவுக் கொள்கையில் புதிய திருப்பம் ஏற்படுத்தியது.
  • கருப்புப் பணத்தை மீட்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழுவை உருவாக்கியது.
  • இருதரப்பு உறவை வலுப்படுத்திக் கொள்ளும் விதமாக பூடானுக்கு தனது முதலாவது பயணத்தை மோடி மேற்கொண்டார்.
  • 100 நாட்களுக்குள் தங்களது இலக்கு என்ன என்பதை வரையறுத்து செயல்பட அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியது.
  • கோவாவில் இந்தியாவின் மிகப் பெரிய போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யாவை பார்வையிட்டு கடற்படையினர் மத்தியில் உரையாற்றியது.
  • ஓய்வூதியத் திட்டத்துக்காக ரூ1,000 கோடி ஒதுக்கீடு
  • நர்மதா அணைக்கட்டின் நீர் தேக்கும் அளவை உயர்த்த அனுமதித்தது.
  • அரசு மருத்துவமனைகளில் இலவசமாக எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ, சிடி ஸ்கேன் வழங்க முடிவு செய்தது.
  • பொருளாதார வளர்ச்சி 5.7% ஆக உயர்ந்தது.
  • பாதுகாப்புத் துறையில் அன்னிய முதலீட்டை 49% ஆக உயர்த்தியது.
  • அமைச்சர்களின் உறவினர்களை ஊழியர்களாக நியமிக்கக் கூடாது.
  • கங்கை நதி தூய்மைக்காக ரூ2037 கோடி ஒதுக்கீடு.
English summary
As the Narendra Modi government completed over 100 days in power, there has been a stark difference in the functioning of the NDA and UPA governments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X