For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

BREAKING NEWS: சென்னையில் அமித்ஷா.. பாஜக நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை

ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் இன்று விசாரணை செய்யப்பட உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.

2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு எதிராக ஓ. பன்னீர் செல்வம் உட்பட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால் சபாநாயகர் இவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யவில்லை. 11 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்ற தீர்ப்பில், சபாநாயகரின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறினார்.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர். இதற்கு எதிரான வழக்கு மீது இன்று விசாரணை நடந்தது. அப்போது சபாநாயகர் தனபால், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களும், 4 வாரங்களுக்குள் பதிலளிக்க கூறி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஒத்தி வைத்தது.

Newest First Oldest First
9:27 PM, 9 Jul

தாய்லாந்து குகையிலிருந்து இதுவரை 8 சிறுவர்கள் மீட்பு

மீதமுள்ள 4 சிறுவர்களும் ஒரு கால்பந்து பயிற்சியாளரும் விரைவில் மீட்கப்படுவர்

8:42 PM, 9 Jul

சென்னையில் பரவலாக மழை

சென்னை புறநகர் பகுதிகளில் சாரல் மழை

முகப்பேர், அண்ணா நகர், கோயம்பேடு, போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை

வடபழனி, கிண்டி, அசோக் நகர் ஆகிய பகுதிகளிலும் காற்றுடன் கூடிய மழை பெய்தது

7:53 PM, 9 Jul

ஊழல் இல்லாத கட்சியுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி- அமித்ஷா

செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் கூட்டணி அமைப்பது குறித்து பேசவுள்ளோம்

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைய பாடுபடுவோம்- அமித்ஷா

ஈஞ்சம்பாக்கத்தில் வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேச்சு

விருந்தினர்களுக்கு விருந்தோம்பல் செய்து யார் காத்திருக்கிறார்களோ அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம்

7:52 PM, 9 Jul

தமிழகத்தில் ஊழல் அதிகம் உள்ளது

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மற்ற கட்சிகளை விட பாஜக நிறைய செய்துள்ளது

2019-இல் தமிழகத்தில் பாஜக பெரும் வெற்றி பெறும்

4 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ஏராளமான நிதியுதவியை பாஜக அரசு அளித்துள்ளது- அமித்ஷா

5:47 PM, 9 Jul

லோக் ஆயுக்தாவை மு.க.ஸ்டாலின் கடைசியில் எதிர்த்தது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

வரலாற்றுச் சிறப்பு மிக்க லோக் ஆயுக்தா சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றம்

ஊழலை ஒழிப்பதற்கான எண்ணம் திமுகவுக்கு துளியும் இல்லை

எல்லாவற்றிலும் ஊழல் செய்த கட்சி திமுக

திமுகவுக்கு பயம், அதனால்தான் தேர்வுக் குழுவுக்கு அனுப்புமாறு கூறுகின்றனர்

தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு லோக் ஆயுக்தா

ஊழல் எதிர்ப்பு என்ற நிலை திமுகவிடம் இல்லை

முதல்வர் உள்ளிட்ட அனைவரையும் இந்த அமைப்பால் விசாரிக்க முடியும்- அமைச்சர் ஜெயக்குமார்

5:40 PM, 9 Jul

ஜெ. நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் மரியாதை

மலர் வளையம் வைத்து முதல்வரும், துணை முதல்வரும் மரியாதை

சட்டசபை கூட்டம் நிறைவடைந்த நிலையில் மரியாதை

5:27 PM, 9 Jul

மும்பையில் காலை முதல் கன மழை

பல ரயில்கள் புறப்படும் நேரம் தாமதம், விமான போக்குவரத்திலும் சிக்கல்

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் மக்கள் அவதி

5:24 PM, 9 Jul

கோவை தாமஸ் வீதியில் 750 கிலோ குட்கா பறிமுதல்

தனியார் நிறுவன குடோனில் குட்கா பறிமுதல்

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிர்ச்சி

5:20 PM, 9 Jul

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை சிபிஐ ஏன் விசாரிக்க கூடாது? ஹைகோர்ட் கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி வழக்கு

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு அரசுக்கு கேள்வி

சுதந்திர, நேர்மையான விசாரணை நடக்க வேண்டுமானால் சிபிஐக்கு பரிந்துரைக்கலாமே- ஹைகோர்ட்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரு தரப்பிலும் தவறு இருப்பதாக தெரிகிறது-இந்திரா பானர்ஜி

4:01 PM, 9 Jul

தாய்லாந்து குகையில் சிக்கிய மேலும் ஒரு சிறுவன் மீட்பு

இதுவரை 5 சிறுவர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்

இன்னும் 7 சிறுவர்கள் 1 பயிற்சியாளர் மீட்கப்பட வேண்டும்

சிறுவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது

தாய்லாந்து குகையில் 2 வாரம் முன்பு 13 பேர் சிக்கினார்கள்

3:55 PM, 9 Jul

பலவீனமான லோக்ஆயுக்தா மசோதா தாக்கல்- ஸ்டாலின் குற்றச்சாட்டு

அலுவல் ஆய்வு குழுவிற்கு மசோதாவை அனுப்ப கோரினேன்

அரசு பணி ஒப்பந்தங்களை விசாரிக்க முடியாத அளவுக்கு மசோதாவில் அம்சங்கள்

3:55 PM, 9 Jul

தமிழக சட்டசபையில் நிறைவேறியது லோக்ஆயுக்தா சட்டம்

முதல்வர், அமைச்சர்களை விசாரிக்கும் அதிகாரம் கொண்டதாக சட்டம் நிறைவேற்றம்

அரசு ஒப்பந்தங்கள் விசாரிக்கப்படாது என்ற அம்சத்தை எதிர்த்து திமுக வெளிநடப்பு

2:49 PM, 9 Jul

ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிகமாக மின்சாரம் வழங்க முடியாது

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தற்காலிக மின் இணைப்பு வழங்க கோரி வேதாந்தா குழுமம் வழக்கு

வேதாந்த குழுமத்தின் கோரிக்கையை ஏற்க மதுரை கிளை மறுப்பு

2:25 PM, 9 Jul

நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

சீராய்வு மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை: உச்சநீதிமன்றம் தடாலடி

2:00 PM, 9 Jul

அமித்ஷாவை வரவேற்கும் பேனர்கள்: ஹைகோர்ட் கேள்வி

சென்னையில் பல இடங்களில் அமித்ஷாவை வரவேற்று பேனர்கள்

விதிமுறையை மீறி பேனர் வைக்கப்படுவதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும்: ஹைகோர்ட்

1:38 PM, 9 Jul

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும்

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - வானிலை மையம்

சென்னையில் மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

12:50 PM, 9 Jul

தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று தாஜ்மகால் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் - சுப்ரீம்கோர்ட்

தொழுகை நடத்துவதற்கு வேறு பல இடங்கள் உள்ளது- உச்சநீதிமன்றம்

12:45 PM, 9 Jul

சென்னை வந்தார் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா

அமித் ஷாவிற்கு முரளிதரராவ்,பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை உள்ளிட்டோர் வரவேற்பு

லோக் சபா தேர்தல் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துவார்

இசிஆரில் உள்ள தனியார் அரங்கில் ஆலோசனை நடத்தப்படும்

12:31 PM, 9 Jul

லோக்ஆயுக்தா சட்ட வரம்புக்குள் முதல்வரும் அடக்கம்

தமிழக சட்டசபையில் தாக்கல் செய்துள்ள மசோதாவில் தகவல்

12:18 PM, 9 Jul

நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பு நிறுவனத்திற்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

சர்கார் திரைப்படத்தில் சிகரெட் புகைப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

நஷ்ட ஈடாக மூவரும் தலா ரூ.10 கோடியை புற்றுநோய் மருத்துவ மையத்திற்கு கொடுக்க வழக்கு

12:10 PM, 9 Jul

உச்சநீதிமன்ற விசாரணைகளை இனி நேரலையாக பார்க்கலாம்

விசாரணைகளை லைவ் காட்சிகளாக காண்பிக்க உச்சநீதிமன்றம் சம்மதம்

12:10 PM, 9 Jul

5வது நாளாக கிறிஸ்டி நிறுவனத்தில் ஐடி ரெய்டு

2016ல் கூட்டுறவு வங்கி கணக்கில் ரூ.245 கோடி டெபாசிட் செய்தது அம்பலம்

நிறுவன தலைவர் குமாரசாமி டெபாசிட் செய்தது விசாரணையில் அம்பலம்

வருமான வரித்துறை அதிகாரிகள் திடுக்கிடும் தகவல்

11:52 AM, 9 Jul

தமிழக சட்டசபையில் தாக்கலானது லோக்ஆயுக்தா மசோதா

ஊழல் ஒழிப்புக்கான லோக்ஆயுக்தா மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் ஜெயக்குமார்

11:12 AM, 9 Jul

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி வழக்கு

சபாநாயகர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சபாநாயகர் உள்ளிட்டோர் 4 வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ்

10:47 AM, 9 Jul

ட்விட்டரில் டிரெண்ட் ஆகும், 'அமித்ஷாவே திரும்பி போ'

#GobackAmitShah என்ற ஹேஷ்டேக்கில் திமுக ஆதரவு நெட்டிசன்கள் ட்வீட்

பிரதமர் மோடி வருகையின்போது அவரை திரும்பி போக கூறி இதுபோல ட்ரெண்ட் செய்திருந்தனர்

10:21 AM, 9 Jul

நிர்பயா கொலை வழக்கு: குற்றவாளிகள் மேல்முறையீடு மீது இன்று தீர்ப்பு

மேல்முறையீடு மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

டெல்லியில் ஓடும் பஸ்சில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார் நிர்பயா

9:57 AM, 9 Jul

எந்த கட்சியுடன் அதிமுக கூட்டணி என்பது பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு-ஜெயக்குமார்

கட்சி பொதுக்குழு, செயற்குழு போன்ற அதிகாரம்மிக்க அமைப்புதான் முடிவு செய்யும்

காங்கிரஸ் கட்சிக்கு 1967லேயே காங்கிரசுக்கு சமாதி கட்டியாகிவிட்டது- அமைச்சர் ஜெயக்குமார்

9:00 AM, 9 Jul

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணி மீண்டும் தொடங்கியது

இதுவரை 4 சிறுவர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்

இன்னும் 8 சிறுவர்கள் 1 பயிற்சியாளர் மீட்கப்பட வேண்டும்

இரவு நேரம் என்பதால் மீட்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது

தாய்லாந்து குகையில் 2 வாரம் முன்பு 13 பேர் சிக்கினார்கள்

8:55 AM, 9 Jul

ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் இன்று விசாரணை

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

2017 பிப்ரவரியில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்

ஆனால் இவர்கள் 11 பேரும் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை

இதற்கு எதிரான வழக்கு மீது இன்று விசாரணை நடக்கிறது

8:25 AM, 9 Jul

ஜப்பானில் பெய்து வரும் மழையால் 90 பேர் பலி

3 நாட்களில் 620 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது

3 நாட்களில் பெய்த மழையால் 90 பேர் பலி

200க்கும் அதிகமானோர் காணவில்லை என்பதால் பதற்றம்

18 லட்சம் பேர் மத்திய ஜப்பானில் இருந்து வெளியேற்றம்

READ MORE

English summary
11 MLA Disqualification Including O Paneerselvam: Supreme Court will hear the case today, which has filed by DMK and TTV Dinakaran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X