சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்.. தமிழக வீரர் உள்பட 12 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 11 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர்.
சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது இன்று நக்சலைட்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் உள்பட 12 பேர் வீரமரணம் அடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்திலேயே நக்சல்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் சுக்மா மாவட்டமும் ஒன்று. அங்குள்ள பேஜா என்ற பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் இன்று காலை வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மறைந்திருந்து நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 219 படைப் பிரிவை சேர்ந்த 12 வீரர்கள் பலியாகினர். இதில் விழுப்புரம் மாவட்டம் கழுமரத்தை சேர்ந்த சங்கர் என்ற சிஆர்பிஎப் வீரரும் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடந்த போது 10 துப்பாக்கிகளையும் 2 ரேடியோ கருவிகளையும் நக்சல்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
மோடி இரங்கல்:
நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications