அனைவருக்கும் நன்றி, 11 நாட்கள் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறும்: மமதா பானர்ஜி
கொல்கத்தா: சட்டசபை தேர்தல் வெற்றி 11 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 294 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் 6 கட்டமாக நடத்தப்பட்டது. தேர்தலின்போது பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் 216 தொகுதிகளிலும், இடது சாரிகள் 31 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும், பாஜக 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இது குறித்து மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி கூறுகையில்,
எங்களை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி. வரும் 27ம் தேதி நான் மீண்டும் முதல்வராக பதவியேற்பேன். பல பிரச்சனைகளுக்கு இடையே தேர்தலை அமைதியாக நடத்திக் கொடுத்த தேர்தல் ஆணையத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதால் தான் பொய் பிரச்சாரங்கள் எடுபடவில்லை. வெற்றிக் கொண்டாட்டம் மாநிலம் முழுவதும் 11 நாட்கள் நடைபெறும் என்றார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications