கொல்கத்தாவில் ரூ.100 கேட்டு சீனியர்கள் தாக்கியதில் 11 வயது மாணவி பலி
கொல்கத்தா: சீனியர்கள் தாக்கியதில் காயமடைந்த கொல்கத்தா பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். கோபமடைந்த அம்மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
கொல்கத்தாவைச் சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த 11 வயது மாணவி இண்டிரில்லா தாஸ். அவரது பள்ளியில் மூத்த வகுப்பில் படித்து வரும் சில சீனியர் மாணவிகள் இண்ட்ரில்லாவிடம் ரூ100 கேட்டு நச்சரித்து வந்துள்ளனர்.
ஆனால், அதனை தர அவர் மறுத்து விட்டதால், கடந்த வாரம் அவரை கழிவறை ஒன்றில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். கிட்டத்தட்ட 5 மணி நேரம் கழிவறைக்குள் சிக்கி தவித்திருக்கிறார் இண்டிரில்லா.
இந்த சம்பவத்திற்குப் பிறகும், தொடர்ந்து இண்ட்ரில்லாவிற்கு தொல்லை கொடுத்து வந்துள்ளனர் சீனியர் மாணவிகள். ஒரு கட்டத்தில், கோபத்தில் இண்ட்ரில்லாவைத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அம்மாணவி, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
மகளை இழந்த துக்கத்தில் கோபத்துடன் பள்ளியை முற்றுகையிட்டனர் இண்ட்ரில்லாவின் பெற்றோர். சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் நடந்த சம்பவம் குறித்து முறையிட்டனர். அதற்குள் அவர்களது உறவினர்கள் பள்ளி வகுப்பறையில் இருந்த பொருட்களை அடித்து துவம்சம் செய்தனர்.
ஆனால், நடந்த சம்பவம் குறித்து இதுவரை போலீசில் புகார் அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications