16 வருடமாக போலீஸ் கண்ணில் மண்ணை தூவிய மம்மி.. கைதானார் மாஃபியா தலைவி!
நீண்ட நாள் போலீசாரால் தேடப்பட்டு வந்த மம்மி என அனைவராலும் அழைக்கப்படும் மாஃபியா கும்பல் தலைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான்: நீண்ட நாள் போலீசாரால் தேடப்பட்டு வந்த மம்மி என அனைவராலும் அழைக்கப்படும் மாஃபியா கும்பல் தலைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் என்றாலே கொலை, கொள்ளைக்கு பேர்போன இடம் என்றால் அது மிகையாகாது. ஆம் ராஜஸ்தான் மாநிலத்தில் அந்த அளவிற்கு கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.
ராஜஸ்தானில் நடக்கும் கொள்ளைகளை அறிவுறுத்தும் வகையில் எல்லா மொழிகளிலும் பல திரைப்படங்கள் கூட எல்லா எடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழில் கூட தீரன் என்ற படம் வந்துள்ளது. இந்த நிலையில் மம்மி என அனைவராலும் அழைக்கப்படும் மாஃபியா கும்பல் தலைவியின் கதை மிகவும் வியப்புக்கு உரியது.

அன்று தொடங்கி
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மல்கான் சிங், பசிரான் என்ற பெண்ணை திருமணம் செய்த பிறகு தான் பிழைப்புக்காகக் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் டெல்லி வந்துள்ளார். அப்போது வீட்டு தேவைக்காக பசிரான் சிறு சிறு திருட்டுகளை செய்துள்ளார். அன்று ஆரம்பித்தது இவர்களின் குற்ற செயல். அவர்தான் இப்போது மாமியாக வலம் வருவது.

மாஃபியா
தங்களின் குடும்ப கஷ்டத்தை சரி செய்வதற்காக சிறு சிறு குற்றச் சம்பவங்களை செய்யத் தொடங்கிய இவர்கள். பிறகு, மாஃபியா கூட்டத்திற்கே தலைவியாக மாறியுள்ளார் பசிரான் (வயது 62). எட்டு களுக்கு தாயான இவர், தான் பெற்ற மகன்களை தன்னுடன் சேர்த்துக்கொண்டு செய்யாத குற்றமே இல்லை என்று போலீசார் கூறுகிறார்கள்.

மகன்களுடன் சேர்ந்து கொள்ளை
தன் மகன்களோடு இணைந்து, கொலை, ஒப்பந்தக் கொலை, கொள்ளை, சட்டவிரோத நடவடிக்கை ஆகியவற்றில் செயல்பட்டுள்ளார். இவரைக் இவருடன் இருக்கும் கூட்டாளிகள் 'மம்மி' என்று அழைப்பார்களாம். இந்த நிலையில் பல வருடங்களாக எல்லா போலீஸ் கண்களிலும் விரல் விட்டு தப்பித்து வந்த பசிரானை, டெல்லி சங்கம் விஹார் பகுதியில் போலீஸார் சில வாரங்களுக்கு முன் கைது செய்துள்ளனர்.

போலீஸ் கூறுகையில்
பெண் குற்றவாளிகளில் முக்கிய குற்றவாளி என பல மாநில போலீசாலும் தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளிதான் பசிரான். இவர், மீது சுமார் 113 குற்றவழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த நிலையில்தான் அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி சென்றார்.

மீண்டும் கைது செய்தனர்
போலீஸார் பிடியிலிருந்து தப்பி சென்ற பசிரான் சில நாள்களாகத் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், தன் குடும்பத்தினரை சந்திக்க சங்கம் விஹார் பகுதிக்கு நேற்று வந்திருந்தார். அந்த தகவல் முன்கூடியே கிடைத்ததால் அவரை அந்த இடத்திலேயே சுற்றிவளைத்து கைதுசெய்தோம். அவர் தன் மகன்களுடன் சேர்ந்து செய்த குற்றத்திற்கு அளவில்லை.

உடலை எரித்தனர்
பசிரான் அவரது கூட்டாளிகளுடன் இணைந்து சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு, ஒருவரை கடத்தி சென்று காட்டு பகுதியில் வைத்து கொலை செய்துள்ளனர். அதுமட்டும் அல்லாமல், மேலும், அந்த கொலை செய்யப்பட்ட உடலை எரித்துள்ளார். இந்த கொலையை செய்த அனைவரையும் காவல்துறையினர் கடந்த மாதம் குண்டோடு கைது செய்தனர். ஆனால், அதில் இருந்து பசிரான் மட்டும் தப்பித்து விட்டார்.

ஒப்பந்த கொலை
இதனிடையில், அகப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் இந்த கொலையை ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்தது தெரிய வந்தது. பசிரான் கடந்த 16 ஆண்டுகளாகச் சட்டத்துக்கு முரணான குற்றச் செயல்களைச் செய்து வந்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications