ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து.. 12 பேர் பலி.. 58 பேர் காயம்.. மகாராஷ்டிரத்தில் பரிதாபம்
Subscribe to Oneindia Tamil
துலே: மகாராஷ்டிரத்தின் துலே பகுதியில் ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்தில் 12 பேர் பலியாகிவிட்டனர்.
மகாராஷ்டிரத்தின் துலே பகுதியில் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இங்கு வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில் தொழிற்சாலையை சுற்றிலும் கரும்புகை காணப்பட்டது.

தீயை அணைக்க சுற்று வட்டாரத்தில் இருந்து தீயணைக்கும் வீரர்கள் விரைந்தனர். இந்த விபத்தில் 12 பேர் வரை பலியாகிவிட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
#UPDATE SP Dhule, Vishwas Pandhare: 12 dead & 58 injured in the incident. #Maharashtra https://t.co/2qT9Hfv0cN
— ANI (@ANI) August 31, 2019
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவியுள்ளது.












Click it and Unblock the Notifications