காஷ்மீரில் வேன் கவிழ்ந்து கோர விபத்து- 15 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்
உதம்பூர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
உதம்பூர் மாவட்டத்தில் உள்ள கோர்தி என்ற பகுதியில் இருந்து ராம்நகர் நோக்கி சென்று கொண்டிருந்த வேன், தல்சார் என்ற பகுதியில் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டது. விபத்துக்குள்ளான வேனில், கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அதிக அளவில் இருந்ததாகவும், அதிகப்படியாக ஆட்களை ஏற்றிச் சென்றதாலே விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 8 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், காயமடைந்தவர்கள் உதம்பூர் மாவட்ட மருத்துவமனைக்கும், பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளவர்கள் ஜம்மு நகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications