188 பேரை பலி கொண்ட மும்பை ரயில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேர் குற்றவாளிகள்: கோர்ட் தீர்ப்பு!
மும்பை: மும்பையில் 2006ஆம் ஆண்டு 188 பேரை பலி கொண்ட ரயில் தொண்டர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 13 பேரில் 12 பேரை குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் அப்துல் வஹீத் சேக் என்பவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளுக்கான தண்டனை வரும் 14-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ந் தேதி வெவ்வேறு வழித்தடங்களில் சென்ற 7 மின்சார ரயில்களின் முதல் வகுப்பு பெட்டிகளில் சக்திவாய்ந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் 188 பேர் பலியானார்கள். 829 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தோரில் ஒருவர் கோமா நிலையில் இருந்த நிலையில் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்றுதான் உயிரிழந்தார்.

நாட்டையே உலுக்கிய இந்த பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்டதாக கமல் அகமது அன்சாரி (வயது 37), தன்வீர் அகமது அன்சாரி (37), முகமது பைசல் சேக் (36), எக்தேசாம் சித்திக் (30), முகமது மஜித் சபி (32), சேக் ஆலம் (41), முகமது சலீம் அன்சாரி (34), அப்துல் வஹீத் சேக் (34), முசாம்மில் சேக் (27), சொகைல் முகமது சேக் (43), சமீர் அகமது சேக் (36), நவீத் உசைன் கான் (30) மற்றும் ஆசிப் கான் (38) ஆகிய 13 பேரை போலீசார் கைது செய்து மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் ஆசம் சிமா உள்ளிட்ட 14 பேர் தொடர்ந்து தலைமறைவாக இருக்கின்றனர். ஏறத்தாழ 9 ஆண்டுகள் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு ஆகஸ்டில் முடிவுக்கு வந்தது.
அரசு தரப்பில் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகள், 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் 18 மருத்துவர்கள் உட்பட 192 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
இந்த வழக்கில் இன்று மும்பை சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அன்சாரி உள்ளிட்ட 12 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அப்துல் வஹீத் சேக் என்பவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 14-ந் தேதி அறிவிக்கப்படும் என்றும் மும்பை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications