3 ஊசி செலுத்தியும்.. நாய் கடி ரேபீஸ் பாதிப்பால் 12 வயது சிறுமி பலி.. கேரள அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

பத்தினம்திட்டா: கேரளாவில் தெரு நாய் கடித்து ரேபீஸ் பாதிப்பால் 12 வயது மாணவி அபிராமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக, கேரளாவில் இதுபோன்று தடுப்பூசி செலுத்திய பின்னரும் ரேபீஸால் உயிரிழப்பு ஏற்படுவது பெரும் அச்சுறுத்தலையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் மண்டபுழா பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ். இவரது மகள் அபிராமி (12) அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

 தெருநாய் கடித்தது

தெருநாய் கடித்தது

இந்த சூழலில், கடந்த மாதம் 14-ம் தேதி காலை கடைக்கு பால் வாங்கச் சென்ற அபிராமியை அங்கிருந்த தெரு நாய் ஒன்று அவரை கடித்து. இதில் கால்களிலும், முகத்திலும் அவருக்கு 6 காயங்கள் ஏற்பட்டன. நாய் கடித்தது என தெரியவந்ததும், உடனடியாக அபிராமியின் தந்தை ஹரீஷ், அவரை பத்தினம்திட்டா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு ஷீனாவுக்கு முதல் டோஸ் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

 ரேபீஸ் தடுப்பூசி

ரேபீஸ் தடுப்பூசி

அடுத்ததாக, இரண்டு டோஸ் தடுப்பூசிகள் சரியான தேதியில் அருகில் இருந்த ஆரம்ப சுகாதாரநிலையத்தில் அபிராமிக்கு செலுத்தப்பட்டன. 4-வது டோஸ் தடுப்பூசி இந்த மாதம் 10-ம் தேதி செலுத்த வேண்டி இருந்தது. இதனிடையே, கடந்த வியாழக்கிழமை சிறுமி அபிராமியின் உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டது. உடல் முழுவதும் கடுமையான வலியும் இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் காய்ச்சலுக்கான மருந்துகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

 ரேபீஸ் பாதிப்பு

ரேபீஸ் பாதிப்பு

ஆனால், மாலையில் அவரது நிலைமை மோசமானது. அவரது வாயில் இருந்து தொடர்ந்து நுரை வந்துள்ளது. கண்கள் மேல்நோக்கி சென்றிருக்கின்றன. இதனால் பயந்துபோன அவரது பெற்றோர், பத்தினம்திட்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அபிராமியை பரிசோதித்த மருத்துவர்கள், ஷீனாவுக்கு ரேபீஸ் பாதித்துள்ளதாகவும், கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் கூறினர். இதையடுத்து, அபிராமி கோட்டயம் அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டார்.

 மரணம்

மரணம்

அங்கு சிகிச்சை பெற்ற போதிலும் அவருக்கு பாதிப்பு சரியாகவில்லை. தண்ணீரை பார்த்து பயப்படுவது, வெறிபிடித்தது போல கத்துவது, மூச்சுவிட திணறுவது என ரேபீஸ் அறிகுறிகள் நேற்று காலை தென்பட்டன. இதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு ரேபீஸ் வைரஸ் அவரது மூளையை பாதித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பொதுவாக, ஒருவருக்கு ரேபீஸ் அறிகுறிகள் தென்பட்டாலே அவரை காப்பாற்றவே முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+