நள்ளிரவில் பயங்கர விபத்து.. பற்றி எரிந்த தனியார் பேருந்து! 13 பேர் உடல் கருகி பலி.. ம.பியில் சோகம்
போபால்: மத்தியப் பிரதேசத்தில் சாலை விபத்தில் சிக்கிய தனியார் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்ததில் 13 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் குணா-ஆரோன் நெடுஞ்சாலையில் நேற்றிரவு தனியார் பேருந்து ஒன்று டேங்கர் லாரி மீது மோதி கவிழ்ந்திருக்கிறது. இதனால் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்திருக்கிறது. விஷயமறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்னர் உடல் கருகி 13 பேர் பலியாகியுள்ளனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பயணிகளை மீட்ட தீயணைப்பு துறையினர் அவர்களை மருத்தவமனையில் அனுமதித்துள்ளனர்.

தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு வருவதாக தகவல். இந்த விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றிய போலீசார், அவர்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. பேருந்து விபத்தில் 13 பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications