உ.பி.யில் சூறாவளியுடன் பெய்த பேய் மழைக்கு 13 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
லக்னொ: உத்தர பிரதேசத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் நேற்று சூறாவளி காற்றுடன் கடுமையான மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக, சோனேபத்ரா, மிர்சாபூர், படோகி ஆகிய பகுதிகளில் மொத்தம் 13பேர் உயிரிழந்தனர். இதில் பலரும் இடி தாக்கியும், சிலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
சப்கா, சோட்வால், நக்பூர் மற்றும் தோரியா போன்ற கிராமங்களில் ஆடு, மாடுகள் பல இந்த சூறாவளிக்கு பலியாகியுள்ளன. மேலும் மாமரங்கள் வேரோடு சாய்ந்ததால் பல ஏக்கர் பரப்பளவில் மாமரங்களை பயிரிட்ட விவசாயிகள் கவலையிலுள்ளனர். இருப்பினும் மழை மற்றும் காற்றால், உத்தர பிரதேசத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளுகுளு வானிலை நிலவிவருகிறது.












Click it and Unblock the Notifications