தன்னை பலாத்காரம் செய்தவரின் 5 வயது மகனின் தலையை துண்டித்த 13 வயது சிறுமி
லக்னோ: உத்தர பிரததேச மாநிலத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த நபரின் 5 வயது மகனின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார் 13 வயது சிறுமி ஒருவர்.
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள கைர் பகுதியைச் சேர்ந்தவர் ரிங்கு. அவரது மகன் அமித்(5). கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த அமித்தை அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி நைசாகப் பேசி ஆளில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று தலையை துண்டித்து கொலை செய்தார்.

பின்னர் சிறுவனின் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு தீ வைத்தார். மறுநாள் காலை சிறுவனின் பாதி எரிந்த உடலை நாய் இழுத்துச் சென்றபோது தான் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
சிறுவன் கடைசியாக அந்த சிறுமியுடன் காணப்பட்டதால் போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சிறுமி கூறியதாவது,
அமித்தின் தந்தை ரிங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அவரை பழிவாங்கவே அவரின் மகனை கொலை செய்தேன் என்றார்.
இதையடுத்து போலீசார் சிறுமியை கொலை வழக்கிலும், ரிங்குவை பலாத்கார வழக்கிலும் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications