இந்தியாவில் கப்பல்கள் மூலமாக தீவிரவாதிகள் ஊடுருவும் ஆபத்து - கடற்படை தளபதி எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியப் பெருங்கடல் பகுதியில் 140 தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் செயல்படுவதால் கப்பல்கள் மூலமாக தீவிரவாதிகள் ஊடுருவும் ஆபத்து உள்ளதாக கடற்படை தளபதி ஜோஷி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடற்படை தினத்தையொட்டி கடற்படை தளபதி டி.கே.ஜோஷி டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வணிகக்கப்பல்களில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பயணம் செய்கின்றனர். இவர்களில் பலரும் இந்திய கடல் பகுதிக்குள் நுழைகின்றனர். இது தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Navy Chief DK Joshi

இத்தகைய கப்பல்கள் மூலமாக தீவிரவாதிகள் ஊடுருவும் ஆபத்தும் உள்ளது. மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் வந்து தாக்குதல்கள் நடத்தியுள்ள நிலையில் இப்படிப்பட்ட ஆயுதம்தாங்கிய காவலர்களின் நடமாட்டம், மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

இவர்களுக்கு கடிவாளம் போடுவதற்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று சர்வதேச கடல்சார் அமைப்பிடம் இந்திய கடற்படை வலியுறுத்தி உள்ளது.இந்தக் கப்பல்களில் எல்லாம் சோதிக்கப்படாத ஆயுதம் தாங்கிய காவலர்கள் இருக்கிறார்கள். இந்தக் கப்பல்களும் இந்திய கடலோரப் பகுதிக்கு அருகே நடமாடுகின்றன. இந்தக் கப்பல்களில் வீரர்களும் வந்ததைக் காண முடிந்துள்ளது.

இந்தக் கப்பல்களை, அவற்றில் உள்ள ஆயுதங்களை, அதன் காவலர்களை பின்தொடர ஒருவரும் இல்லை. எனவே அவற்றை சர்வதேச ஒழுங்குமுறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் மட்டும் ஏறத்தாழ 140 தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவை தனியார் நிறுவனங்களின் ஒப்பந்த ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களை பணி அமர்த்தி உள்ளன. இவர்கள் கடலில் ஒரு கப்பலில் இருந்து மற்ற கப்பல்களுக்கு மாறுகின்றனர். அதற்கான அனுமதியும் அவர்களிடம் இருப்பதில்லை.

கடலில் மிதக்கும் ஆயுத கிடங்காகவும் கப்பல்கள் இயங்குகின்றன. இப்படித்தான் சமீபத்தில் தூத்துக்குடி அருகே ஆயுதக்கப்பல் பிடிபட்டது. இந்தக் கப்பலில் 4 நாடுகளைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய காவலர்கள் 25 பேர் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தளபதி ஜோஷி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+