சத்தீஸ்கர்: மரத்தில் வேன் மோதி 15 பேர் பலி… திருமணத்திற்கு சென்ற போது விபரீதம்
அம்பிகாபூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமண கோஷ்டியினர் சென்ற வேன் மரத்தின் மீது மோதியதில் 15 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 40 பேர் ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று ஒரு திறந்த வேனில் சென்றுக் கொண்டிருந்தனர்.
அம்பிகாபூர்-சீதாப்பூர் சாலையில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையின் ஓரம் உள்ள ஒரு பெரிய மரத்தின் மீது பயங்கர சத்தத்துடன் மோதி, தலைக்குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 7 பெண்கள் உள்பட 15 பேர் பலியாகினர். படுகாயமடைந்த மற்றவர்கள் அம்பிகாபூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications