வயல் பக்கம் ஒதுங்கிய சிறுமியை கடத்திப் போய் பலாத்காரம் செய்த கயவர்கள் கைது
லக்னௌ: உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகாலை நேரத்தில் காலை கடன் கழிக்க வயல் பக்கம் ஒதுங்கிய 15 வயது சிறுமியை கடத்திச் சென்று நான்கு நாட்களாக பலாத்காரம் செய்த 2 கொடூரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.
இயற்கை உபாதைகளை கழிக்க வீட்டுக்கு வெளியே போகாதீர்கள் கழிவறைகளை கட்டுங்கள் என்று தொலைக்காட்சிகளில் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் இந்தியா முழுவதும் எண்ணற்ற கிராமங்களில் கழிவறைகள் கட்டப்பட்டவிடவில்லை.

உ.பி மாநிலத்தில் காலை கடன் கழிக்க வயல்வெளிகளில் ஒதுங்கும் சிறுமிகள்தான் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர். இதேபோன்றதொரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.
முசாபர்நகர் மாவட்டம், திண்ட்வாலி கிராமத்தை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி கடந்த 26-ஆம் தேதி அதிகாலை தூங்கி எழுந்து, காலை கடன் கழிப்பதற்காக வயல்காட்டுக்கு சென்றாள். அப்போது, அங்கு ஒளிந்திருந்த நான்கு வாலிபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி, அவளை கடத்திச்சென்று அதே கிராமத்தில் தனியாக இருந்த ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர்.
அங்கு அந்த நான்கு காமூகர்களும் மாறி, மாறி அந்த சிறுமியை பலாத்காரம் செய்தனர். அவளை வீட்டுக்குள் வைத்து பூட்டி வைத்து வெளியே சென்றுவிட்டு வந்து மீண்டும் பலாத்காரம் செய்துள்ளனர். நான்கு நாட்களாக அந்த கும்பலிடம் கொடுமை அனுபவித்த சிறுமி, நேற்று அந்த வீட்டில் இருந்து தப்பியோடினாள். நடந்த சம்பவத்தை தனது குடும்பத்தினரிடம் அழுதுகொண்டே கூறினாள்.
சிறுமியை காணாமல் தேடி அலைந்த குடும்பத்தினர். மகள் கிடைத்தும் அவர்களால் மகிழ்ச்சியடைய முடியவில்லை. மகள் சீரழிக்கப்பட்டதை போலீசில் புகார் கொடுத்தனர்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்து முகேஷ் மற்றும் பிரதீப் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான இரண்டுபேரை தேடி வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications