ஆபரேஷன் தாமரைக்கு ரிவீட்?16 பாஜக எம்.எல்.ஏக்கள் கட்சி தாவ ரெடி என்கிறது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா!
ராஞ்சி: பாஜகவின் 16 எம்.எல்.ஏக்கள் தங்களது கட்சிக்கு தாவ உள்ளதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அறிவித்துள்ளது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக திரவுபதி முர்மு போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு நேற்று பதவியேற்றார்.
திரவுபதி முர்மு, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போதும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அவரையே ஆதரித்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றும் வருகிறது. இன்னொரு பக்கம், காங்கிரஸ் கட்சியின் 7 எம்.எல்.ஏக்களும் திரவுபதி முர்முவுக்கு வாக்களித்தனர்.

இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் பாஜக தமது வழக்கமான ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை அரங்கேற்றுவதாக குற்றமும் சாட்டப்பட்டது. ஆனால் பாஜகவினர் இதனை மறுத்து வந்தனர். இந்த நிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவர் சுப்ரியோ பட்டாச்சார்யா, பாஜகவி 16 எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம் தாவ தயாராக உள்ளனர் என கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளார். ஆனால் பாஜக இதனை மறுத்துள்ளது.
மேலும் சுரங்க ஊழலில் சிக்கி இருக்கிறார் முதல்வர் ஹேமந்த் சோரன். அண்மையில் அவருக்கு நெருக்கமானவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதனை திசைதிருப்பத்தான் இப்படியான தகவல்களை ஹேமந்த் சோரன் தரப்பு பரப்பி விடுகிறது என்கின்றனர் பாஜக தலைவர்கள்.
எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ?
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications