காதலித்ததற்காக 17 வயது சிறுவன் முகத்தில் கரியைப் பூசி மொட்டை அடித்த பஞ்சாயத்து
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஒரு பெண்ணை காதலித்ததற்காக 17 வயது சிறுவனின் முகத்தில் கரியை பூசி அவருக்கு மொட்டை அடித்த கொடுமை நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் காசிபூர் மாவட்டத்தில் உள்ள கூத்தன் காஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயதாகும் அவர் 16 வயதான ப்ரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை காதலித்துள்ளார்.

கடந்த 15ம் தேதி ப்ரியா தனது உறவினர்களை பார்க்க சென்றுள்ளார். அதற்கு ராஜேஷோ அவர்களை பார்க்க செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். அதையும் மீறி ப்ரியா கிளம்பியதால் ராஜேஷ் அவரது கன்னத்தில் அறைந்தார். அதன் பிறகு அவர்களின் காதல் விவகாரம் ஊருக்கு தெரிய வந்துள்ளது.
உடனே ஆளும் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. ராஜ்மதி நிஷாத்தின் மகன் அம்ரேந்திர நிஷாத்திற்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பஞ்சாயத்தை கூட்டினார். பஞ்சாயத்தில் ராஜேஷ் முகத்தில் கரியை பூசி அவரை அடித்து நொறுக்கினர். பின்னர் அம்ரேந்திர நிஷாத் முன்னிலையில் ராஜேஷுக்கு மொட்டையடிக்கப்பட்டது.
இந்நிலையில் ப்ரியாவின் முகத்தில் கரி பூசப்பட்டது. அவர்கள் இருவரையும் ஊர் முழுக்க ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு அவர்கள் இருவருக்கும் பஞ்சாயத்தார் முன்னிலையில் கட்டாய கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு ராஜேஷ், ப்ரியாவை 6 மாதத்திற்கு ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக பஞ்சாயத்தார் தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications